( எஸ்.அஷ்ரப்கான் )
சாய்ந்தமருது ஸ்ரீ லங்கா இளைஞர் நிலையத்தின் 3வது ஆண்டு பூர்த்தியை
முன்னிட்டு அங்கு கல்வி பயிலும் மாணவ அணிகளுக்கிடையிலான மென்பந்து
கிரிக்கெட் சுற்றுப்போட்டி “எஸ்.எல்.வை.சி. லீக் ட்றொபி-2013” இன்று
06.04.2013 சனிக்கிழமை சாய்ந்தமருது பௌஸி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில்,
சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி. அன்வர்
தலைமையில் ஆரம்பமானது.
அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இச் சுற்றுப்
போட்டியின் ஆரம்ப போட்டியில் சிங்கள, ஆங்கிலப் பாட அணிகள் மோதிக்கொண்டன.
இதன்படி நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆங்கில பாட அணி முதலில்
துடுப்பெடுத்தாடி 10 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 47
ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிங்கள பாட அணி 08 ஓவர்களில் ஒரு விக்கெட்
இழப்பிற்கு 48 ஓட்டங்களைப்பெற்று 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
இந்நிலையத்தின் இளைஞர்களைக் கொண்ட சிங்களம், ஆங்கிலம், கணிணி, ஹோட்டல்
முகாமைத்துவம், பகுதிநேர ஆங்கிலம் ஆகிய பாட ரீதியான 05 அணிகள்
இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றின.
இந்த சுற்றுப் போட்டியின் ஆரம்ப விழாவிற்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது
ஸ்ரீ லங்கா இளைஞர் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ. லத்தீப் அவர்களும்
விசேட அதிதியாக நிலைய போதனாசிரியர் எம்.ஐ.எம். பாயிஸ் ஆகியோரும்
கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment