நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க ஒத்துழைக்கும் எந்தவொரு கட்சிக்கும் எதிர்வரும் தேர்தலில் ஆதரவு வழங்கத் தயார் என நியாயமான சமுதாயத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்து சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என நேற்று கூடிய தேரர்கள் கருத்து முன்வைத்ததாக இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சோபித்த தேரர் குறிப்பிட்டார்.
இந்த சட்டத் திருத்தம் குறித்து ஏனைய மதத் தலைவர்களுக்கும் தெளிவுபடுத்தப்படும் என அவர் கூறினார்.
அதன் பின்னர் அது குறித்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொது மக்களுக்கு விளக்கமளிக்கப்படும் என சோபித்த தேரர் தெரிவித்தார்.
இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்ட எதிர்பார்ப்பதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்ததாக சோபித்த தேரர் நினைவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளதாக சோபித்த தேரர் தெரிவித்தார்.
அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்க வேண்டியது அவசியம் என்பதால் சமூகத்தில் அது தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெற வேண்டும் என சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். AD

0 comments :
Post a Comment