முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகள் மக்களிடம் கையளிப்பு.

-றிஸ்கான்- 

முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (2013.04.6) மக்களிடம் கையளித்துள்ளார்.

கல்வி,சுகாதாரம்,போக்குவரத்து,தபாலக மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

நெடுங்கேணி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சந்தை தொகுதி மற்றும் புதிய பஸ் தரிப்பு நிலையம் என்பனவும் இவற்றில் உள்ளடங்குகின்றன.முல்லைத்தீவு நகரில் தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு சந்தை ஆரம்ப நிகழ்விலும்,அதனையடுத்து வெட்டு வாய்க்கால் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,முல்லைத்தீவு மஹா வித்தியாலயம்,மாஞசோலையில் அமைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கான மகப்பேற்று பிரிவு,குழந்தை பராமரிப்பு பிரிவு கூடம் ,குமுழமுனை பாடசாலைக்கான விஞ்ஞான ஆய்வு  என்பனவற்றையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் திறந்து வைத்தார்.

அதே வேளை 11 மில்லியன் ரூபா செலவில் ஒட்டுச் சுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலகமும் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் ஷாஹிப் மொஹிதீன்,முல்லை அரசாங்க அதிபர் என்.வேதநாயகம்,ஜனாதிபதியின் முல்லை மாவட்ட இணைப்பாளர் கணகரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :