பொறுப்புக்களை ஏற்று முன்னோக்கிச் செல்வதற்கு எதிர்கால சந்ததியினரை தயார்ப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
நிட்டம்புவ - அத்தனகல்ல பகுதியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
'எம்மைச் சுற்றியுள்ள தலைவர்கள், நாம் தலைவர்களாகக் கருதுபவர்கள் உரிய முறையில் செயற்படாவிட்டால் நமது பிள்ளைகளும் அதனையே பின்பற்றுவார்கள்.
அதிகம் தவறிழைக்கும் தலைவர்களே நாட்டில் உள்ளனர். ஒரு சில மட்டத்தில் நாமும் அவ்வாறானவர்களாக இருக்கலாம். யார் தவறிழைப்பவர்கள், யார் தவறிழைப்பவர்களல்ல என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்.
தலைவர்கள் தவறிழைக்கும் பட்சத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என கற்பிக்கும் காலமொன்றிற்கு எமது பிள்ளைகளை நாம் இட்டுச் செல்ல வேண்டும்.'
0 comments :
Post a Comment