(பஹ்மியூஸூப்)
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒரே மேசையில் அமர்ந்து முஸ்லிம் சமூகம் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை
முஸ்லிம் அரசியல் கட்சித்தலைவர்களும் பொது இயக்கங்களும், ஜம்யத்துல் உலமா சபை, அரசியல்வாதிகளும் தங்களிடையே உள்ள கருத்து முறன்பாடுகளை மறந்து முஸ்லிம் மக்கள் கௌரவத்துடனும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு எல்லோரும் ஒற்றுமைபட்டு குரல் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளதென வீதி அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நமது நாட்டில் மூன்று தசாப்த காலத்திற்கு பின் மூவின மக்களும் இன உறவுடன்; அமைதியாகவும் சந்தோசமாகவும்; வாழக்கூடிய நிலை உருவாகி வருகின்ற இச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம் மக்களின் கலாச்சாரத்தையும், பொருளாதாரத்தையும், கௌரவத்தையும் சீர்குலைக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பும், அதனுடன் இணைந்த சில இன வாதக்குழுக்களும் வீண் வதந்திகளையும் பரப்பி நீண்ட வரலாற்றுடன் இலங்கை நாட்டில் வாழுகின்ற சிங்கள, முஸ்லிம் சமூகங்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தி சிங்கள மக்களிடையே முஸ்லிம் மக்கள் தொடர்பான மிக மோசமான பழிகளை சுமத்தி சிங்கள முஸ்லிம் கலவரம் ஒன்றை ஏற்படுத்த இத்தீய சக்திகள் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
இலங்கை முஸ்லிம் மக்களில் 1/3 பகுதியினர் வடகிழக்கு மாகாணங்களில் வாழுகின்றனர். ஏனைய 2/3 பகுதியினர் வடகிழக்குக்கு வெளியே பெரும்பான்மையின சிங்கள மக்களுடன் அன்னியோன்னியமாக வாழ்ந்து வருகின்றனர். வடகிழக்குக்கு வெளியே பெரும்பான்மையின் சிங்கள மக்களுடன் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்தினர் அச்சத்துடனும் பீதியுடனும் வாழ்ந்து வரும் நிலை அண்மைக்காலமாக தோன்றியுள்ளது. இந்த நிலைமையில் முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்பட்டுள்ளது.
நமது நாட்டில் பெரும்பான்மையாக வாழுகின்ற சிங்கள மக்களும், அரசியல் தலைவர்களும் சிங்கள மதத்தலைவர்களும் பொதுபலசேனா மற்றும் அதனுடன் இணைந்த சில இன வாதக்குழுக்களுக்கு எதிராக குரல்கொடுத்து வருவது இலங்கை முஸ்லிம் மக்களின் மனதிற்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நமது நாட்டின் ஒற்றுமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டுள்ளனர். அத்துடன் இலங்கை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலைக்கு முஸ்லிம் சமூகம் தன்னால் ஆன ஒத்துழைப்பையும் செய்து வந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இரு முறைகள் ஐக்கிய நாடுகள் சபையில் (ஜெனீவா) மனித உரிமை மீறல் சம்மந்தமான குற்றப்பேரனை சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கூட அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை எதிர்த்து முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் இதையெல்லாம் மறந்து பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
தாய்லாந்து ஒரு பௌத்த நாடாக இருந்த போதிலும் அந்த நாட்டின் வாழும் சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களின் காலச்சாரத்தையும், கௌரவத்தை பாதுகாக்கும் நோக்குடன் ஹலால் சான்றிதழை வழங்கி முஸ்லிம் மக்களை தாய்லாந்து அரசாங்கம் கௌரவித்துள்ளது. எமது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஹலால் உணவை முஸ்லிம் மக்கள் அனைவரும் மரணிக்கும் வரை உண்போம். இது எங்களின் இஸ்லாம் மதத்துடன் தொடர்பான விடயமாகும். இதனை யாரும் தடுக்க முடியாது.
முஸ்லிம்;களுக்குரிய ஹலால் உணவை முஸ்லிம்;களே உண்டு வருகின்றார்கள். பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் ஏனைய சமூகத்தினரை ஹலால் உணவு உண்ணுங்கள் என்று நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. விரும்பினால் நீங்களும் உண்ணலாம் அதில் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. முஸ்லிம்;கள் பன்றி இறைச்சினை உண்பது ஹறாம் ஆகும். அப்படி இருந்தும் நமது நாட்டில் பன்றி இறைச்சியின் எண்ணெய் கலந்த பல உணவு வகைகள் பாவணையில் உள்ளது. இவற்றில் இருந்து முஸ்லிம்;களை பாதுகாக்கவே ஹலால் சான்றிதழ் முறை இலங்கையில் உருவாக்கப்பட்டது.
பல்லின மக்கள் வாழுகின்ற நமது நாட்டில் காலத்திற்கு காலம் சமூகங்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்படும் போது சமயத்தலைவர்கள் ஒன்றினைந்ணைந்து பிரச்சினைகளை சமாதானமாக தீர்த்து வைத்த வரலாரே நம் கண்முன்னே உள்ளது.
இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. முஸ்லிம்கள் சுதந்திரமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு இலங்கையில் சுகந்திரம் இல்லையெனில் அமைச்சர் றவூப் ஹக்கீமும், முஸ்லிம் தலைவர்களும் சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டியது தான் எனவும், பொதுபலசேனா உள்ளிட்ட எந்தவொரு பௌத்த அமைப்பாலும் முஸ்லிம் மக்களுக்கு எந்த விதப் பிரச்சனைகளும் ஏற்படவில்லை என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொதுபலசேனா சில இனவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட காட்டு மிராண்டிதனமான சில சம்பவங்களை முன் வைக்கின்றேன். அதாவது அனுராதபுர கிராமம் தம்புள்ள ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல், குருநாகல் ஆரிய சிசிரவத்த உமர் இப்னு கந்தாபள்ளி, தெஹிவளை தாருக் ரஃமான் பள்ளிவாசல், குருநாகல் தம்பகம அல்-அக்ரம் ஜூம்ஆ பள்ளிவாசல், ராஜகிரிய தாருல் ஈமான் பள்ளிவாசல், வெள்ளம்பிட்டி கோஹிலவத்த அல்-இப்றாஹிமியா ஜூம்ஆ பள்ளிவாசல், அனுராதபுர மல்வத்த ஒயா லேன் தைக்கா பள்ளிவாசல்
பின்வரும் இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக காரசாரமான கோசங்களும் எழுப்பப்ட்டுள்ளன. பதுளை, கண்டி, குருநாகல், எதுகள் விகாரை, பிலியந்தலை, எம்பிலிப்பட்டிய, கொழும்பு, மஹரகம, வரகாபொல, ஹொரம்பாவ, குளியாப்பிட்டிய, புத்தளம் ஆகிய இடங்கள் ஆகும்.
நமது நாட்டில் அனைத்து சமூகங்களும் சுயமரியாதையுடனும், கௌரவத்துடனும், வாழும் போதே நாட்டுப்பற்றுடன் நாம் நம்பிக்கையுடன் வாழமுடியும். அண்மைக்காலமாக பொதுபலசேன அமைப்பின் நடவடிக்கையினால் நமது நாட்டில் அமைதி குழைக்கப்பட்டுள்ளது. அண்மையில் மண்ணப்பிட்டியில் முஸ்லிம் பிரதி தபால் அதிபர் ஒருவரின் பர்தா இழுக்கப்பட்ட விடயம், கண்டி பிரதேசத்தில் மௌலவி ஒருவரின் தொப்பி கலட்டப்பட்ட விடயம், புறக்கோட்டை பகுதி பாடசாலை மாணவி ஒருவரின் பர்தாவை கலட்டுமாறு எச்சரிக்கை விடப்பட்ட விடயம், களுத்துறை பாலிகா பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைக்கு பர்தா அணிந்து வர தடை செய்த விடயம், திக்வெல்ல பிரதேசத்திலே மகரிப் தொழுகைக்காக பள்ளிக்குச் சென்ற முஸ்லிம் ஒருவர் தாக்கப்பட்ட விடயம், முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான பெபிலியான வர்த்தக நிலையம் தாக்கப்பட்ட விடயம்( ஜெய்லானி பள்ளி விடயம்) மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் இரண்டு கொள்கலன்களிலே அம்பாறைக்கு ஆயுதம் கொண்டு சென்றதாக கூறும் விடயம்.
இந்துக்களும் பௌத்த மக்களும் கருத்தடை செய்து இனத்தை பெருக்காமல் உள்ளனர். முஸ்லிம் மக்கள் கருத்தடை செய்யாமல் இருப்பதனால் முஸ்லிம்;களுடைய இன விகிதாசாரம் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும், இலங்கையில் ஆரம்ப காலத்தில் 35000 ஆக இருந்த முஸ்லிம்களுடைய சனத்தொகை தற்போது 2000000 ஆக அதிகரித்து கூறப்பட்ட விடயம். இவ்வாறான விடயம் தொடர்ந்து கொண்டு செல்லுகின்றன. கருத்தடை செய்வதில் முஸ்லிம் மக்களின் வீதம் மிகக்குறைவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் ஒரு போதும் பௌத்த மக்களைளையோ இந்துமக்களையோ கருத்தடை செய்யுங்கள் அல்லது கருத்தடைசெய்யவேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றோம்.
இலங்கை நாட்டில் வரலாற்று இன உறவுடன் வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு பெரும் தொல்லைகள் கொடுத்து முஸ்லிம் மக்களின் உணவு, உடை இறைவணக்கதலங்களை நோக்கி சிங்கள மக்கள் மத்தியில் இனத்துவேச உணர்வுகளை ஊட்டி விட்டு இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு எவ்விதப் பிரச்சனைகளும் இல்லை என்று சொல்வது துவேசத்தின் உச்சநிலையாகும். நாம் பிறந்த எமது இலங்கையில் முஸ்லிம்களுக்குரிய உணவை உண்ண முடியாது முஸ்லிம்களுக்கு உரிய உடைகள் அணிய முடியாது. முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு சுதந்திரமாக சென்று வணக்க வழிபாடுகளில் கலந்து கொள்ளும் போது தொல்லைகள் கொடுத்துவிட்டு முஸ்லிம்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை எனக் பொதுபலசேனாவின் செயலாளர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. சமூகத்தின் மத்தியில் முன் மாதிரியாக செயல்பட வேண்டிய மதத் தலைவர்கள்; இவ்வாறு மிருகத்தனமான கருத்துக்களை விதைத்து சமூகங்களை நிரந்தரமாக பகையாக்கும் நடவடிக்கைகளை நாம் கண்டிருக்கின்றோம்.முஸ்லிம்களின் தாயகம் இலங்கை என்பதை மறந்து இனத்துவேச உணர்வுடன் செயல்படும் இவ்வாறான மதத்தலைவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வையும், ஐக்கியத்தையும் வளர்த்து வரலாறு படைக்க வேண்டிய சமயத்தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இன துவேச நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் முஸ்லிம் மக்களின் பொருளாதாரத்தை சீர்குழைக்கும் நோக்கத்துடன் முஸ்லிம்;களின் வர்த்தக நிலையங்களுக்கு சென்று வெளிப்படையாகவே மதகுருமார்கள் வீதியில் இறங்கி கற்களை வீசுவதுடன் இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களுக்கு சென்று எச்சரிக்கை விடுவதும் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிப்பதுடன் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு உணவு அளிக்கும் போது மூன்று முறை துப்பவேண்டும் என முஸ்லிம்களின் புனித குர்ஆன் கூறி உள்ளதாக பொதுபலசேனாவின் தலைவர் கூறி இருப்பது இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் உள்ளங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்;களின் புனித குர்ஆனில் சொல்லப்படாதவைகளை சிங்கள மக்கள் மத்தியில் கூறி சிங்கள மக்களை உணர்ச்சி ஊட்டுவதன் மூலம் இன, மத பேதமின்றி பல்லாண்டு காலம் இலங்கையில் வாழ்ந்து வரும் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இனமோதலை ஏற்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகள் அண்மைக் காலமாக தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
இன வாதக் கருதுக்களை நமது நாட்டில் யார் முன்வைத்தாலும் தேசிய காங்கிரஸ் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நமது நாட்டில் இனவாத கருத்துகளை எந்த இனத்தில் இருந்து வந்தாலும் நாம் அதனை எதிர்த்து வந்துள்ளோம்.இனவாதக் கருத்துக்களை பரப்புபவர்களை அடையாளம் கண்டு அரசாங்கம் சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வழங்கக் கூடிய வகையில் செயல்படும் போதுதான் நமது நாட்டில் வாழும் பல்லின மக்களினதும் நாட்டுப்பற்று, நம்பிக்கை, வலராற்று இன உறவுடன் வாழக் கூடிய நிலைமை தொடர்ந்தும் இருக்கும். இல்லையெனில் சமூகங்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு இன மோதல்கள் தொடர்ந்து நடைபெறும் நாடாக நமது இலங்கை நாடு எதிர்காலத்தில் பெயர் எடுக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
தத்தமது சமயங்கள், இனங்கள் தொடர்பாக நம்பி;க்கை வைக்கவேண்டும். தத்தமது இனத்திற்காக குரல் கொடுக்கும் அதேவேளை சகோதர சமூகங்களுடன் புரிந்துணர்வுடன் இணைந்து வாழும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும். சர்வதேச ரீதியில் பல பிரச்சினைக்கு முகம்கொடுத்துவரும் நாடு அதிகாரம் பரவலாக்கம் தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நேரத்தில் நமது இலங்கை நாட்டில் வாழும் இன்னும் ஒரு சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடடிக்கைகளை மேற்கொள்வது கண்டிக்கவேண்டிய விடயமாகும்.
இன்றைய சமாதான சூழ்நிலையில் நமது நாட்டை எல்லா மக்களும் ஒன்றிணைந்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தாமல், முஸ்லிம் மக்களைத் தனிமைப்படுத்தி நாட்டில் மீண்டும் இனப் பிரச்சினையை ஏற்படுத்துவது இலங்கைக்கு எதிரான சூழ்நிலையை மீண்டும் சர்வதேச நாடுகளில் உருவாக்குவதும், இலங்கையின் கொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்து சகல இலங்கை மக்களினதும் பொருளாதாரத்தையும் எதிர்கால சுபீட்சத்தையும் மிகவும் பின்நோக்கிச் செல்வதற்கான முயற்சியாகும்.
0 comments :
Post a Comment