(பாலமுனை றனீஸ் ஆதம்)
பாலமுனை அல் ஈமானிய்யா அறபுக் கல்லூரியின் முதலாவது அல் - ஹாபிழ் கௌரவிப்பு விழா 2013.04.06 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேக் ஏ.எல்.மௌஜூத் (பாகவி) தலைமையில் இடம் பெற்றது.
இதில் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் 'ஷைகுல் பலாஹ்' அஷ்ஷேக் எம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி; சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரி அதிபர் 'ஷைகுத் தப்லீகி' அஷ்ஷேக் எம்.பி.அலியார் (தேவ்பந்தி) ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், விஷேட சொற்பொழிவாளர்களாக அஷ்ஷேக் ஏ.ஆர்.அப்துர் ரஹ்மான் (மழாஹிரி) அஷ்ஷேக் அலி அஹ்மத் (றஷாதி) அஷ்ஷேக் எம்.எச்.எம்.சாதிக் (ஷாஹிமி, மழாஹிரி) ஆகியோர்களும், முன்னிலை அதிதிகளாக
உதவிக் கல்விப்பணிப்பாளருமான ஏ.சாஹூல் ஹமீத், பாலமுனை ஜூம் ஆப் பள்ளிவாசல் தலைவர் யு.எல்.அபூபக்கர் ஆகியோர்களும் கௌரவ அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் மௌலவி, மற்றும் அல் - ஈமானிய்யா அறபிக்கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள், தாய்மார்கள் வெளியிடங்களைச் சேர்ந்த உலமாக்கள், பொதுமக்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும் 01 வது அல் - ஹாபிழ் முகம்மது ஹனீபா முகம்மட் சிப்கானுக்கு பொன்னாடை போத்தியும் மற்றும் பெரிய ஜூம்மாப் பள்ளிவாசலினாலும் தனவந்தர்களினாலும் பரிசுகளும் கையளிப்பு செய்யப்பட்டு கௌரவிப்பு விழா இனிதே நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment