பொது பல சேனா என்ற பௌத்த தீவிரவாத அமைப்பினால் இஸ்லாமிக் புக் ஹவுஸ் என்ற புத்தக நிலையத்திற்கு எழுத்து மூலம் விடுக்கப்பட்டாதக் கூறப்படும் அச்சுறுத்தலைத் தொடர்ந்து,
நிலைமையை நேரில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் திங்கட்கிழமை இன்று (01) முற்பகல் கொழும்பு-9, தெமட்டக்கொட வீதியில் 'தாருல் ஈமான்' கட்டத்தில் அமைந்துள்ள அந்த புத்தக நிலையத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
பொது பல சேனாவினால் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படும் அச்சுறுத்தல் கடிதத்தை அமைச்சர் பார்வையிட்டதோடு, புத்தக நிலையத்தின் முகாமையாளர் செய்யத் அஹமத், முன்னாள் பேராதனை பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹீம்,
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி பொதுச் செயலாளர் சட்டத்தரணி பாரிஸ் உட்பட முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடினார்.
0 comments :
Post a Comment