-KRM.றிஸ்கான்-
தற்போது நிலவும் அதிக உஷ்ணத்துடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சலை ஒத்த புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சிறுவர் நோய் தொடர்பான வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா கூறினார்.
இந்நோய் குறித்து அவர் மேலும் கூறியதாவது, சிறுவர்களையும் பெரியவர்களையும் தாக்கக் கூடியதாக இந்த வைரஸ் நோய் காணப்படுவதால் காய்ச்சல் பீடித்தவுடன் வைத்தியரை நாடி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்குமாயின் வைத்தியரின் பரிந்துரையுடன் இரத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
மேற்படி காய்ச்சலுக்கு பெரஸிட்டமோல் வில்லைகளே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் மேற்படி வைரஸ் நோயாயின் வேறு நிவாரண வில்லைகள் பாவித்தால் அதிக இரத்த ஓட்டம் ஏற்படும் எனவும் எச்சரிக்கிறார்.
கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி, மூட்டுக்கள் நோவு, உடல் உளைச்சல் என்பனவே இந்த நோய்க்கான அறிகுறியாகும்.
கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி, மூட்டுக்கள் நோவு, உடல் உளைச்சல் என்பனவே இந்த நோய்க்கான அறிகுறியாகும்.
மேலும் இந்த வெப்ப கால நிலையால் சிறுவர்களின் தோலில் வெயில் கூரு கொப்பளங்களும் கை, கால், வாய்ப் பகுதிகளில் சிறு புண்களும் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
இச்சந்தர்ப்பங்களில் உடலை அடிக்கடி கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம். அதிகமாக நீர் ஆகாரங்களை அருந்துவதும் நோய் நிவாரணியாக அமையும் என்றும் கூறினார்.
0 comments :
Post a Comment