2013ம் ஆண்டிக்கான நிந்தவூர் பிரதேச செயலக விளையாட்டுப்போட்டி நிறைவு.


























(சுலைமான் றாபி)

 நிந்தவூர் பிரதேச செயலக விளையாட்டு கழகங்களுக்கிடையில் இடம் பெறும் வருடாந்த விளையாட்டு விழா இன்று (20.04.2013) சனிக்கிழமை நிறைவு பெற்றது. கிரிகெட், உதைபந்து கபடி, எல்லே மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் இதில் இடம் பெற்றன. இதில் ஒட்டுமொத்த (Overall  Champion ) சாம்பியனாக நிந்தவூர் லகான் விளையாட்டுக்கழகமும், இரண்டாம் நிலை (Runners  up ) சாம்பியனாக நிந்தவூர் மதீனா  விளையாட்டுக்கழகமும் தெரிவு செய்யப்பட்டது. மேற்படி இரண்டு கழகங்களுக்கும் அதிதிகள் வெற்றிக்கேடயங்களை வழங்கி கௌரவித்தனர்.

விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எல் அனஸ் அஹமட் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்ற இப்போட்டியில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஹாஜியாணி ஆர்.யூ அப்துல் ஜலீல் அவர்களும், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம் ஏ எம் தாஹிர் , நிந்தவூர் பிரதேச செயலக கணக்காளர் எம்.ஆர்.எம் நிசாம், மாவட்ட உதவி பதிவாளர் இசட்  நசீர்டீன் , நிர்வாக  உத்தியோகத்தர் திருமதி எஸ் முகைடீன், இளைஞர் சேவை அதிகாரி எம்.ரி.எம் ஹாரூன், மற்றும் விளையாட்டு, உடற்கல்வி ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இந்த விளையாட்டுப்போட்டிகள் கடந்த (23.03.2013) சனிக்கிழமை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :