-றிஸ்கான் முகம்மட்-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சும், இலங்கை சமுர்த்தி அதிகார சபையும் இணைந்து அமுல்படுத்தியுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் புத்தாண்டு விளையாட்டு விழா இன்று சாய்ந்தமருது கரைவாகு வொலிவேரியன் மைதானத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி, வலய முகாமையாளர் எஸ்.றிபாயா தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும், அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், சமுர்த்தி மகா சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் அல்-ஹாஜ் ஏ.சி.ஏ.நஜீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத், சமுர்த்தி வலய உதவி முகாமையாளர் எம்.எம்.எம்.முபாறக் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விளையாட்டு விழாவில் பல வினோத விளையாட்டுக்கள் நடைபெற்றதுடன் போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு அதிதிகளினால் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment