முஸ்லிம்கள் குனூத் ஓதுவதை நிறுத்துங்கள் அவசர அறிக்கை- ஜமியதுல் உலமா


முஸ்லிம்கள் தொழுகையில் ஓதிவருகின்ற குனூத் அந்நாஸிலாவை உடனடியாக நிறுத்துமாறு ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
இது குறித்து ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ.முபாறக் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
அண்மைக்காலமாக நாட்டில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகள் சகலரையும் பாதிப்புள்ளாக்கியதோடு, நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. அந்நடவடிக்கைகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இம்சைப்படுத்தியதுடன் அவர்களது அன்றாட வாழ்வையும் பெரிதும் பாதித்தது.
ஆபத்தான நிலைமைகளில் றஸூல் (ஸல்) அவர்கள் குனூத் அந்நாஸிலாவை ஓதி வந்தார்கள். அதன் ஒளியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையைக் கவனத்திற்கொண்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முஸ்லிம்களினதும் நாட்டினதும் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஐவேளை தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை ஓதி வருமாறும், சுன்னத்தான நோன்புகளை நோற்குமாறும் அனைத்து முஸ்லிம்களையும் வேண்டியிருந்தது.
ஜம்மியயாவின் வழிகாட்டலை ஏற்று நம்மக்கள் சுன்னத்தான் நோன்புகளை நோற்று பிரார்த்தனை செய்து வந்ததோடு குனூத் அந்நாஸிலாவையும் தமது தொழுகைகளில் ஓதி வந்தனர்.
தற்பொழுது குனூத் அந்நாஸிலாவைத் தொடர வேண்டிய அவசியம் உணரப்படாமையினால் அதனை நிறுத்திக் கொள்ளலாம் என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.
குனூத் அந்நாஸிலா என்பது நாட்டில் முஸ்லிம்களுக்கு அச்சம் ஏற்பட்டால் அல்லது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புக்கோரி ஓதுகின்ற துஆ ஆகும். ஆனால் தற்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எந்தவிதமான பிரச்சினை இல்லை. முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதால் குனூத் அந்நாஸிலாவை ஓத வேண்டிய தேவை இல்லை.

நாளைக்கு வேறு ஏதும் இன்னும் குறைத்தால் நல்லம் என்று சொல்வார்களா..?

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :