இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன வக்ப் மற்றும் சமய விவகார அமைச்சர் கலாநிதி மஹ்மூத் அல் ஹப்பாஷ் இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அமைப்பின் தலைவருமான அன்வர் அல் அகாவும் கலந்துகொண்டார்.
மத சகிப்புத்தன்மை, பலஸ்தீன அரசியல் நிலை, இஸ்ரேல் பலஸ்தீன் சமாதானத்தின் முக்கியத்துவம் என்பன தொடர்பில் இச்சந்திப்பில் ஆராயப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment