பொத்துவில் தனியான கல்வி வலயமாகும்- அமைச்சர் விமலவீர


பொத்துவிலில் உப கல்வி வலயம் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருடம் அங்கு நிரந்தர வலயம் உருவாக்கப்படும்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க
பொத்துவில் பிரதேசத்தின் நன்மை கருதி விரைவில் பொத்துவில் உப கல்வி வலயம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அடுத்த வருடம் பொத்துவில் வலயத்துக்கான நிரந்தரமான கல்வி வலயம் உருவாக்கப்படும் என கிழக்கு மாகாண கல்வி,காணி,காணி அபிவிருத்தி, போக்குவத்து அமைச்சர் திரு.விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்திற்கான கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டும். அத்துடன் அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட பொத்துவில் கல்வி கோட்டத்தில் 96 ஆசிரியர்கள் வெற்றிடங்களும், அட்டாளைச்சேனை கல்விக்கோட்டத்தில் 33 ஆசிரியர்கள்  வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் இப்பிரதேசங்களில் கல்வி வளர்ச்சியில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவைப்பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பையின் வேண்டு கோளுக்கிணங்க கல்வி அமைச்சில் நடைபெற்ற விசேட ஒன்று கூடலுக்கு தலைமை தாங்கிய உரையாற்றிய கிழக்கு மாகாண கல்வி, காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இவ்விசேட கூட்டத்தில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கல்வி அமைச்சின் செயலாளர், திரு.என்.ஏ.ஏ.புஸ்பகுமார, மாகாணப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சுந்தரலிங்கம், அக்கரைப்பற்று கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.காஸிம், கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர் ரமேஸ், பொத்துவில் பிரதேச சபைத்தலைவர் வாசித், பொத்துவில் பிரதேச கல்விப் பணிப்பாளர் அஸீஸ், பொத்துவில் பிரதேச முன்னாள் பிரதித்தவிசாளர் பதுர்கான், பிரதேச சபை உறுப்பினர்களான றஹீம், முபாறக், தென்கிழக்கு பல்கழைக்களக விரிவுரையாளர், எ.எல்.ஹனிஸ், அட்டாளைச்சேனை பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி, ஒலுவில் இலங்கை வங்கி முகாமையாளர் ஏ.பி.ஏ.கபூர், பொத்துவில் பிரதேச பாடசாலை அதிபர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உரையாற்றுகையில், பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் 96 ஆசிரியர்கள்; வெற்றிடங்களும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 33 ஆசிரியர்கள் வெற்றிடங்களும், அக்கரைப்பற்று பிரதேசத்தல் 05 ஆசிரியர்கள்  வெற்றிடங்களும் நீண்ட காலமாக நிலவி வருகின்றது. குறிப்பாக பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் 96 ஆசிரியர்கள் வெற்றிடங்கள்; நிலவுவதால் பொத்துவில் பிரதேச கல்வி வளர்ச்சியில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், சில பாடசாலைகளில் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் வெற்றிடங்கள்  நிரப்பப்படாமல் தங்களின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமாட்டோம் என பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எனவே, கிழக்கு மாகாண சபையால் விரைவில் வழங்கப்படவுள்ள ஆசிரியர் நியமனத்தின் போது பொத்துவில், அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளில் நிலவுகின்ற 139 ஆசிரியர்கள்  வெற்றிடங்களை நிரப்ப கல்வி அமைச்சர் விசேட நடவடிக்கை மேற்கொள்வதுடன், பொத்துவில் பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கையான தனியான கல்வி வலயத்தினை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் பொத்துவில் உப-வலயம் திறந்து வைக்கப்படும் போது பொத்துவில் பிரதேச 18 பாடசாலைகளுக்குமான நிர்வாகம் செய்வதற்கான தனியான ஆளணிகளை நியமனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 உடனடியாக செயற்படும் வண்ணம் பொத்துவில் உப-கல்வி வலயக் காரியாலயத்தை ஆளணியுடன் இயக்க வைப்பது என முடிவு செய்யப்பட்டது. அடுத்த வருடம் பொத்துவில் பிரதேசத்தில் நிரந்தர கல்வி வலயம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் கிழக்கு மாகாண சபையால் விரைவில் வழங்கப்படவுள்ள ஆசிரியர் நியமனத்தை  திருகோணமலை மாவட்டத்திற்கு செய்துவிட்டு பொத்துவில், அட்டாளைச்சேனை கோட்டங்களில் நிலவுகின்ற 139 ஆசிரியர்கள் வெற்றிடங்களை திருமலை மாவட்டத்தில் கடமை புரியும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை  இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(பஹ்மியூஸூப்)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :