(எம்.பைஷல் இஸ்மாயில்)
இலங்கையின் உச்சத்தில் சூரியன் தோன்றுவதால் நாட்டில் தற்போது அதிக வெப்பநிலை தோன்றியுள்ளது. இதனால் அம்பாறை மாவட்டத்திலும் அதிக வெப்பம் நிலவிக் காணப்படுதனால் அம்பாறை மாவட்ட பிரதான வீதியோரங்களில் சர்பத் கடைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இந்த வெப்ப நிலைக்கு மத்தியில் பொதுமக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் பல சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் அரச, அரச சார்பற்ற காரியாலயங்களில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் தங்களின் பிரதேசங்களில் இருந்து வேறு பிரதேசங்களுக்கு தம் கடமையை மேற்கொள்வதற்காக வேண்டி இந்த உஷ்ன நிலைமையையும் பாராமல் தமக்கென்றுள்ள வேலைகளைச் செய்தும் வருகின்றனர்.
அந்த வகையில் பிரதான வீதியால் பிரயாணங்களை மேற்கொள்ளும் பிரயாணிகள் இவ்வெப்ப உஷ்னம் காரணமாக வீதியோரங்களில் உள்ள குளிரான சர்பத்தினை விற்பனை செய்யும் வியாபாரியிடம் தறித்து நின்று குளிரான சர்பத்தினை அருந்தி செல்கின்றனர்.
இவ்வாறு பிரதான வீதியோரங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சர்பத் கடைகளில் ஒன்று அட்டாளைச்சேனை சிலோன் சிப்பிங் காரியாலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.
அந்த சர்பத் கடை உரிமையாளர் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த சாதாரண நாட்களில் சுமார் 40 இற்கும் 50 இற்கும் இடைப்பட்ட சர்பத்தினை விற்பனை செய்து வந்தேன். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்தத் தொகையிலிருந்து சுமார் 75 ஆக அதிகரித்து காணப்படுவதாகவும், எதிர் வரும் தினங்களில் 100 இக்கும் மேற்பட்ட சர்பத்துக்களை அதிகமாக விற்பனை செய்யலாம் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட கடை உரிமையாளர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தான் இந்த வியாபாரத்தை ஒரு வியாபார நோக்கமாக செய்யவில்லை. மாறாக பிரதான வீதிகளில் தாகத்தினால் பிரயாணங்களை மேற்கொள்ளும் பிரயாணிகள் தாகத்தை தீர்த்துக்கொள்ளும் வகையிலேயே ஒரு சமுக நோக்குடன் தான் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு விற்பணை செய்யப்படும் சர்பத் ஒன்றின் விலை 50.00 ரூபாவுக்கு விற்பணை செய்யப்பட்ட வருவதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment