(எம்.பைஷல் இஸ்மாயில்)

ல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு கீ
ழுள்ள 6 வைத்தியசாலைகளுக்கு 6 அம்பியூலன்ஸ் வண்டிகளை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.
இவ்வாறு கையளிக்கப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டிகள் 'தேசத்திற்கு மகுடம்' வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு கீழ் உள்ள அட்டாளைச்சேனை, தீகவாபி, பொத்துவில், சம்மாந்துறை, காரைதீவு, மத்திய முகாம் ஆகிய பிரதேசங்கிலுள்ள வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் (2013.04.08) ஆம் திகதி திங்கட்கிழமை அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையின் தலைமையில் பணிமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறிப்பிட்ட பிரதேசங்களுக்குரிய அம்பியூலன்ஸ் வண்டிகளை கையளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :