(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகரத்தில் காணப்படுகின்ற தனியார் பஸ் உரிமையாளர்களே தங்களது பஸ் வண்டிகளுக்கான ஆசனப்பதிவினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு சமூக நல பஸ் உரிமையாளர்கள் அமைப்பு உறுப்பினர்கள், கல்முனை தனியார் வஸ் நிலைய நேரக் காப்பாளர் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் கல்முனை டிப்போ அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று (03.04.2013) இடம்பெற்ற முதல்வருடனான கலந்துரையாடலின்போதே மேற் குறித்த தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது.
பிரயாண பாதை அனுமதிப் பத்திரம் இல்லாத மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து கொழும்பிற்கான பிரயாண பாதை அனுமதிப் பத்திரம் உள்ள பஸ் வண்டிகள் என்பவற்றிற்கான ஆசனப் பதிவுகள் கல்முனையில் இடம்பெறுவதால் கல்முனை பிரதேசத்தில் உள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் நஷ்டத்தினை எதிர்நோக்குவதாக தென்கிழக்கு சமூக நல பஸ் உரிமையாளர்கள் அமைப்பு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
அதனைத் தொடர்ந்தே மேற்படி கலந்துரையாடல் முதல்வர் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த பஸ் உரிமையாளர்கள் மாநகர சபையின் வியாபார அனுமதிப் பத்திரத்தினை பெற்றதன் பின்னர் ஆசனப் பதிவுகளை மேற்கொள்ளவும் நேரக் காப்பாளரினால் மேற் கொள்ளப்படுகின்ற ஆசனப் பதிவின்போது கல்முனை பிரதேச தனியார் பஸ் வண்டிகளுக்கான ஆசனப் பதிவிற்கு முன்னுருமை வழங்கப்படுவதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.
0 comments :
Post a Comment