முஸ்லிம் மக்களுக்காக இரா. சம்பந்தனிடம் நான் மன்னிப்பு கோருகின்றேன்-ஆசாத் சாலி.

நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்மந்தன் பாராளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அதற்கு முஸ்லிம் எம்.பி. யான ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் பிரதயமைச்சர் அப்துல் காதர் ஆகியோர் இடையூறு விளைவித்தனர். 

அதற்காக சம்மந்தன் எம்.பி. யிடம் நாங்கள் மன்னிப்பு கோருகின்றோம் என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் உரையாற்றும்போது அதற்கு முஸ்லிம் எம்.பி. யான ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் பிரதயமைச்சர் அப்துல் காதர் ஆகியோர் இடையூறு விளைவித்தனர்.

அந்தவகையில் இந்த இரண்டு எம்.பி. க்களும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்பது தெளிவாகின்றது. 

அவர்களை முஸ்லிம் மக்கள் நிராகரித்துவிட்டனர். இந்நிலையில் முஸ்லிம் மக்களுக்காக இரா. சம்பந்தனிடம் நான் மன்னிப்பு கோருகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :