(றியாஸ் ஆதம், எம்.பைஷல் இஸ்மாயில்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து அட்டாளைச்சேனை ஜம்மிய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு இன்று (06.04.2013) அட்டாளைச்சேனை-06 இல் அமைந்துள்ள ஹன்ழளத் இப்னு ஆமிர் பள்ளிவாசல் வளாகத்தில் அமைப்பின் தலைவர் மௌலவி ஓ.எல் இல்யாஸ் (ஷர்க்கி) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனிபா அதிதியாகக் கலந்து கொண்டு இரத்ததான நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இன்றைய தினம் இரத்ததானம் செய்வதற்கு நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தங்களது பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்துள்ளதாகவும், முன்கூட்டி பெயர் பதிவு செய்யாதவர்களும் இன்று பி.ப 3.00 மணிவரை இரத்ததானம் செய்ய முடியுமென அமைப்பின் செயலாளர் எம்.ஏ பௌசுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment