சுற்று நிருபத்திற்கு மாற்றமாக மட்டக்களப்பு பாடசாலைகளுக்கான வினாத்தாள்கள்.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் சுற்று நிருபத்திற்கு மாற்றமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கான முதலாம் தவணைப் பரீட்சை
வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டமை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் அந்தந்தப் பாடசாலை மட்டத்திலும், இரண்டாம் தவணைக்கான வினாத்தாள்கள் கோட்ட மட்டத்திலும், மூன்றாம் தவணை வினாப்பத்திரம் வலய மட்டத்திலும் தயாரிக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதலாம் தவணைப் பரீட்சைக்கான வினாப்பத்திரம் வலய மட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வருட ஆரம்பத்தின் முதலாம் தவணைக் காலத்தில் ஏற்பட்ட அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு என்ற காரணத்தினாலும், தேசத்துக்கு மகுடம் காண்காட்சி – 2013, விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளினாலும் பாடத்திட்டங்கள் உரியவேளையில் நிறைவு செய்யப்பட்டிருக்கவில்லை.

இதனைக் கருத்திற் கொண்டே முதலாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் பாடசாலை மட்டத்தில் தயாரிக்கப்பட வேண்டும். என்ற பணிப்புரை மாகாண கல்விப் பணிப்பாளரால் விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை தேசத்திற்கு மகுடம் நிகழ்ச்சி நிகழ்வுகளை மாணவர்கள் கண்டு களிப்பதற்கு வசதியாக கடந்த 27, 28 ஆம் திகதிகளில் வழங்கப்பட்ட விடுமுறைகளுக்குப் பதிலாக குறிப்பிட்ட தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகளை ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்குமாறு மாகாண கல்விப் பணிப்பாளர் சகல பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தன.

இருந்த போதிலும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் இந்த உத்தரவைப் உதாசினம் செய்து மார்ச் 30 ஆம் திகதி குறிப்பிட்ட தவணைப் பரீட்சையை நடாத்திருந்த விடயம் பற்றி ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் விசனத்தைத் தோற்று வித்திருந்தது.

இதேவேளை மட்டக்களப்பு மத்திய வலயக்  கல்விப் பணிப்பாளர் பாடசாலைகளில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்றும் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :