அட்டாளைச்சேனைப்பிரதேச கடலில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் யாருடையது?

 (எம்.பைஷல் இஸ்மாயில்)

ட்டாளைச்சேனைப் பிரதேச பாலமுனை - 2 அம் பிரிவு கடற்கரைப்பகுதியில் இன்று 22.04.2013 அதிகாலையில் பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று அதிகாலையில் வலமைபோல் கடல் மீன்பிடி மீனவர்கள் கடலுக்குச் சென்றபோதே இச்சடலம் கண்டேடுக்கப்பட்டன. இது யார் எங்கிருந்து வந்ததது என்னும் விபரம் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் 60 வயது மதிக்கத்தக்க பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சடலம் பற்றிய விபரம் பொதுமக்களிடத்தில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இச்சடலத்துக்கு உரிமை கோருபவர்கள் அக்கரைப்பற்று பொலிஸாருடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பாலமுனை கடற்கரையில் கரையொதுங்கிய இச்சடலத்தின் கழுத்துப் பகுதியில் கயிறுகட்டப்பட்ட நிலையில் உள்ளது எனவும் இப் பெண்னை திட்டமிட்டு கொலை செய்து கடலில் போட்டிருக்கலாம் என பொதுமக்களிடத்தில் சந்தேகம் நிலவி  அங்கு கூடியிருந்த பொதுமக்களிடத்தில் மிகப்பரவலாக பேசப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கரையொதுங்கிய சடலத்தை அக்கரைப்பற்று பொலிஸார் காலை 11.00 மணியளவில் அவ்விடத்ததை விட்டு அகற்றி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கபட்டு இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளையும் நடாத்தி வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :