(அட்டாளைச்சேனை நிருபர்)
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனைக் கோட்டப் பாடசாலையான முல்லைத்தீவு மீலாத் நகர் அல் - ஜெஸீறா வித்தியால மாணவர்களின் போசாக்கு மட்டத்தினை உயர்த்தும் நோக்குடன் அமுல்படுத்தப்பட்டு வரும் விசேட திட்டத்தின் அடிப்படையில் இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி இன்று (03.04.2013) காலையில் 8.00மணிக்கு நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ், அங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் ஒன்றுசேர்ந்து ஒழுங்கு செய்திருந்த இந் நிகழ்ச்சியில் அக்கரைப்பற்று வலயத்தின் முறைசாராக் கல்விக்குப் பொறுப்பான ஆசிரிய ஆலோசகரும், இப்பாடசாலைக்கான வலயக்கல்வி இணைப்பாளருமான (PSI) அல்ஹாஜ். என்.எம். சம்சுதீன், ஆரம்பக்கல்விக்கான ஆசிரிய ஆலோசகர். எஸ்.எல். மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கஞ்சி வழங்குவதையும், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் புடைசூழ நிற்பதையும் படங்களில் காணலாம். அத்துடன் இப்பாடசாலை மிகவும் பின்தங்கிய பிரதேசத்;துப் பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment