43 ஆவது பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் பட்டமளிப்பு விழாவில் நேற்று பேராளர்களாக கலந்து கொண்டனர்.
ரோயல் கல்லூரி அரங்கில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு சங்கத் தலைவர் சட்டத்தரணி உபாலி ஜயசூரிய தலைமை தாங்கினார்.
ஆயினும் இரு விருந்தினர்களும் விழா மண்டபத்தை வந்தடைந்தபோது சட்ட மா அதிபர் கிளம்பிச் சென்று விட்டார்.
பிரதம நீதியரசர் உட்பட நீதிபதிகள் இவ்விழாவில் பங்கேற்று இருக்கவில்லை.
பாரம்பரிய சம்பிரதாயப்படி பிரதம நீதியரசர்தான் பிரதம உரையை நிகழ்த்த வேண்டும். இம்மரபு இம்முறை மீறப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சி எம். பிகளான கரு ஜயசூரிய, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரின் பிரசன்னமும் அவதானிக்கப்பட்டது. (தாய்நாடு)
0 comments :
Post a Comment