(எம்.பைஷல் இஸ்மாயில்)
நாளை 2013.04.05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 2013.04.15 ஆம் திகதி திங்கட் கிழமை வரை
இலங்கைத் தீவில் சூரியன் உச்சம் கொடுக்க உள்ளன.
இதன் மூலம் சாதாரண நாட்களை விட குறிப்பிட்ட நாட்களில் வெப்பம் அதிகரித்துக் காணப்படும். எனவும் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டின் உஷ்ண காலநிலை காணப்படுகிறது. பொதுவாக இம்மாதத்தில் வெப்பமான காலநிலை காணப்பட்டு வரும் என்றும் காலநிலை அவதான நிலையம் நுவரெலியா அடங்கலாக மத்திய மாகாணங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றும் காலநிலை அவதான நிலையம் மேலும் அறிவித்துள்ளது.
எதிர்வரும் தினங்களில் மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் மாலை வேளைகளில் இடைக்கிடை சிறிது மழையும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மழையுடன் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் அது குறித்து பொதுமக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment