(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான மசூர் மௌலானா விளையாட்டரங்கின் பார்வையாளர் அரங்கு, விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை மற்றும் காரியாலயம் என்பவற்றிற்கான கட்டடத் தொகுதி இன்று (05.04.2013) காலை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த கட்டட தொகுதி ஒரு கோடி ஐம்பது லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் கல்முனை மாநகர சபை செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாக மேற்படி நிதி குறித்த சம்மேளனத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.எம். றகீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, அகில இலங்கை உதைப்பபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஹெர்லி சில்வீர, அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் மற்றும் மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி, ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment