(எம்.பைஷல் இஸ்மாயில்)
தேசத்துக் மகுடம் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக வருகை தந்த நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்மாந்துறைக்கு வருவதை முன்னிட்டு சம்மாந்துறையில் எல்லா இடங்களிலும் பாரிய ஏற்பாடுகளும், அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளில் யாருடைய கவனத்திற்கும் எடுபடாமல் விடுபட்டதில் ஒன்று தபால் காரியாலயம். இக்காரியாலயம் மிக நீணட காலமாக மிக மோசமான முறையில் காட்சிதருவதை யாவரும் காணக்கூடிய வகையில் அமைந்து காணப்படுகின்றது. தபா
ல் காரியாலயம் என்பது அன்றாடம் பொதுமக்களின் பாவனைக்குள் இருந்து இருந்து வருபவையாகும்.
மிக நெடுங்காலமாக எவ்வித அபிவிருத்தியோ, புணர்நிர்மானமோ இன்றிக் காணப்பட்டு வரும் சம்மாந்துறை பிரதான தபால் கந்தோர் ஏன் இன்னும் சம்பந்தப்பட்டவர்களின் கண்களுக்குப் புலப்படவில்லை...???
இது சம்மாந்துறையின் பிரதான தபால் கந்தோர் அல்லவா....???? என்று சஞ்சலப்பட்டுக் கொண்டு கேட்கும் அளவுக்கு அலங்கோலமாகவும், வரணங்கள் அற்றும் இருக்கிறது.
இதனை திருத்தம் செய்து அழகுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வராதது மிகவும் வேதனையைத் தருகின்றது என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment