உலகில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுகின்ற நாடுகளும், அமைப்புக்களும் உள்ளன-ஹசனலி




(எம்.பைஷல் இஸ்மாயில்)

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு பின்புலமாக இருந்து செயற்படுகின்ற உண்மையான சூத்திரதாரியை அடையாளங் காண்பதற்கு ஜனாதிபதி சுயாதீன ஆணைக் குழு ஒன்றினை நியமிக்கவேண்டும். நாட்டில் ஐக்கியத்தையும், அமைதியையும் எற்படுத்துவதற்கும், சட்ட உருவாக்கத்தை மேற்கொள்வதற்கும், அபிவிருத்திகளைச் செய்வதற்கும் ஒரு விசேட பொறிமுறையையும்  ஏற்படுத்தவேண்டும். என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான என்.ரீ.
ஹசனலி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நியாயத்திற்கு புறம்பான வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் திடீரென்று பூதாகாரமாகத் தோற்றம் பெற்று தற்போது திடீரென்று மறைந்து போகக் கூடியதொரு நிலை தென்படுகின்றது.
இதனை ஒரு தீர்வாக எம்மால் பார்க்க முடியாது. இது ஒரு தற்காலிகத் தீர்வாகவே இருக்கும். முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டவாறு விதைக்கபட்ட விசமக் கருத்துக்கள் பெரும்பான்மை மக்களிடையே அடிமட்டம் வரை சென்றுள்ளது. இக்கருத்துக்களை இல்லாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் நிரந்தரத் தீர்வை அடைய முடியும். இதனைச் செய்யாவிட்டால் தற்காலிகமாக இல்லாமல் போன முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கும்.

ஆதலால் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேன அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்குப் பின் நின்று செயற்படுகின்ற உண்மையான சூத்திரதாரி யாரென்று அடையாளங்காணல் வேண்டும். இதற்கு ஜனாதிபதி சுயாதீனமாக இயங்கக் கூடிய ஆணைக் குழுவொன்றினை நியமித்தல் வேண்டும்.

முஸ்லிம்கள் நாட்டில் பிரிவாதத்தைக் கோரவில்லை. அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பூரண ஆதரவு அளித்துக் கொண்டு வருகின்றார்கள். ஆயினும், முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், ஹலால் உணவு, உலமா சபை ஆகியவற்றில் வேண்டுமென்று தலையீடுகள் கீழ்த்தரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுகின்ற நாடுகளும், அமைப்புக்களும் உள்ளன. இந்த நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்புகள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுகின்ற அமைப்புக்களுக்கும் இருக்கின்றதா என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் நாட்டில் இன்னுமொரு பிளவை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சியாகும். முஸ்லிம்களை குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் நாட்டிற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்து வருவதனால் அவப்பெயர் ஏற்படுகின்ற வேகம் குறைவடைந்து காணப்படுன்றது. முஸ்லிம்களுக்கு எதிராக தம்புள்ளயில் ஆரம்பித்த நடவடிக்கைகள் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் அவசியமாகும்.

நாட்டில் ஐக்கியத்தையும், அமைதியையும் எற்படுத்துவதற்கும், சட்ட உருவாக்கத்தை மேற்கொள்வதற்கும், அபிவிருத்திகளைச் செய்வதற்கும் ஒரு விசேட பொறிமுறையை ஜனாதிபதி ஏற்படுத்த வேண்டும். எனவும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளருமான என்.ரீ.ஹசனலி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :