மட்டக்களப்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது.



ட்டக்களப்பில் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் மூவரையும் ஆண்கள் மூவரையும் மட்டக்களப்புப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பில் உள்ள ஹோட்டல்களில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலையடுத்தே சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டு அவர்களை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வி.இந்திரனின் உத்தரவிற்கமைய நீதிமன்ற அனுமதியுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிஞ்சிலி குணசேகர தலைமையிலான குழுவினர் குறித்த ஹோட்டலை முற்றுகையிட்டு அநாகரிகமான முறையில் இருந்த அறுவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆண்களில் இருவர் படைத்தரப்பில் முக்கிய பதவிகளை வகிக்கப்பவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மற்றுமொருவர் அக்கறைப்பற்றைச்சேர்ந்த முஸ்லிம் இனத்தைச்சேர்ந்தவராவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் முஸ்லிம் பெண் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சிங்களப் பெண் கந்தளாயைச் சேர்ந்தவர் என்றும் தமிழ்ப் பெண் பருத்திச்சேனையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :