புதுமண இளம் தம்பதிகள் இருவர் நான்காம் மடியில் இருந்து குதித்து தற்கொலை.!


சென்னை: புதுமணத் தம்பதிகள் நான்காவது மாடியிலிருந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் அறிவழகன் (35) வசித்து வருகிறார். இவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி அபிராமி (26). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.  இன்று அதிகாலை 3 மணியளவில் கணவனும், மனைவியும் 4வது மாடியில் இருந்து கீழே குதித்தனர்.

பலத்த காயம் அடைந்த இருவரையும் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தனர். அபிராமி சம்பவ இடத்திலேயே பலியானார் .  உயிருக்கு போராடிய அறிவழகனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் இறந்து விட்டார்.

தகவல் அறிந்து பல்லாவரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து, இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
inneram
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :