பொது பல சேனா என்ற கடும்போக்கு பெளத்த இயக்கம் தம் இயக்கத்தில் முஸ்லிம் பிரிவு ஒன்றை அமைக்கபோவதாக அண்மையில் அதன் ஊடகவிலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு முஸ்லிம் சமூகத்தின் உள்ள சில சந்தர்ப்பவாதிகள் , முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் இழைக்க தயங்காத துரோகிகள் ஆகியோரை அதாவது இஸ்லாமிய அரபு பரிபாசையில் சொல்வதனால் முனாபிக்குகளை (கோடரிக் காம்புகளை)கொண்ட ஒரு பிரிவை உருவாக்கிவிட முயற்சிப்பதாகவே முஸ்லிம் சமூகம் பார்த்தது, பார்க்கிறது .
இந்த நிலையில் D.B.S. ஜெயராஜ் என்ற எழுத்தாளர் தனது ஆங்கில் கட்டுரை ஒன்றில் பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம் பிரிவு ஒன்றை உருவாக்கும் முயற்சிக்கு மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதவுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அந்த அமைப்புக்கு ஆட்சேர்ப்பதில் மத்திய மாகாணத்தை சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினரும் இதில் அடங்குகின்றனர்.என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
அண்மையில் நடந்த பேஷன் பக் தாக்குதலில் இந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான இளம் முஸ்லிம் பிரதி அமைச்சர் ஒருவர் இந்த தாக்குதல் ஆதாரங்களை மூடிமறைக்க அரசுக்கு உதவிய விதம் குறித்து பொதுபல சேனா அமைப்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.LM
0 comments :
Post a Comment