(சுலைமான் றாபி)
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் எண்ணக்கருவிலும், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எல் அனஸ் அஹமட் அவர்களின் வழிகாட்டலின் கீழும் நிந்தவூரில் காணப்படும் 12 விளையாட்டு கழகங்களிலிருந்து தலா 03 உறுப்பினர்களை இணைத்து விளையாட்டு கழகங்களின் சம்மேளனம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இதன் மூலம் நிந்தவூரின் விளையாட்டு கழகங்களின் ஒற்றுமை, ஐக்கியம், அபிவிருத்தி மற்றும் சமூக சேவை செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது
நிர்வாக சபை உறுப்பினர்களின் விபரங்கள்
1. தலைவர் : எஸ்.எம் ஹனிபா
2. செயலாளர் : ஏ.எல் ஜௌபர்
3. பொருளாளர் : ஏ றிலா இப்ராஹிம்
4. உதவி தலைவர் : எம்.ஏ.எம் றபீக்
5. உதவி செயலாளர் : எம்.எம் சாஜித்
6. கணக்குப் பரிசோதகர் : எம்.எம் முனவ்வர்
ஆலோசகர்களாக பிரதேச செயலாளர் ஹாஜியாணி ஆர்.யு அப்துல் ஜலீல்
பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எல் அனஸ் அகமட் உடற்கல்வி ஆசிரியர் ஐ எல் எம் இப்ராஹிம் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment