நாட்டில் புலனாய்வுப்பிரிவானது நல்ல நிலையிலேயே இருக்கிறது. இந்நிலையில் அல்கைதா அமைப்பின் செயற்பாடுகள் இங்கு இருப்பின் புலனாய்வுப்பிரிவு அது தொடர்பில் அறிந்திருக்கும். எனினும் நாட்டில் அல்கைதா அமைப்பினரின் எவ்வித செயற்பாடுகளும் இடம்பெற்றதாக புலனாய்வுப் பிரிவு கருதவில்லை எனவும் அல்கைதா இந்நாட்டில் செயற்படவில்லை எனவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்தார்.
அண்மையில் ஈரானிய உளவுத்தகவல்களை ஆதாரம் காட்டி வெளியான தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த செய்தியானது முற்றிலும் பொய்யானது என சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அல் கைதா இலங்கையில் செயற்படவில்லை என உறுதிப்பட தெரிவித்தார்.
0 comments :
Post a Comment