கடந்த சனிக்கிழமை பதுளை யூ சி எம் சி நிறுவனத்தின் மூலம் பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தரம் ஐந்து மாணவர்களுக்கான மாபெரும் செயற்பாட்டு ரீதியான கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது .
இதில் பதுளை பண்டர வெலை,தியத்தலாவை ,கல உட ,பஸ்சர .லுனுகல போன்ற பிரதேசங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு பிரயோசனம் அடைந்தனர் .வளவாளராக தெல் தொட்ட கலீல் ஆசிரியர் அவர்கள் பங்குபெற்றியதுடன் ப/பாத்திமா மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களும் பங்கு கொண்டனர் .
மலையக முஸ்லிம் கௌன்சில்( ucmc) மூலம் நடத்தப்படும் இத் தொடர் கருத்தரங்கின் அடுத்த அமர்வு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 2 ௦1 3 / ௦4/ 27 திகதி நடைபெறவுள்ளது.
யூ சி எம் சி தலைவர் ,செயலாளர் .உதவிப் பொருளாளர் ஆகியோர் நிகழ்வின் ஆரம்ப உரை நிகழ்த்துவதையும் குழுக்களாக பிரிந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களையும் படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment