வாரியப்பொல சுபத்தாரம விஹாரையில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 அடி பௌத்த சிலைக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று 07-4-2013 நடைபெற்றது. இதில் விசேடமாக வாரியப்பொல முஸ்லிம் வர்த்தகர்களும் கலந்து கொண்டதுடன் அதன் நிர்மாணப்பணிக்காக நன்கொடை நிதியுதவிகளை வழங்கி வைத்தார்கள்.
இந்த விழா அஸ்கிரிய விஹாரையின் மஹா தேரர் உடுகம ஸ்ரீ தம்ம தஸ்ஸி ரதனபால அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புத்தர் சிலை நிர்மாணப் பணிக்காக பல இலட்சம் ரூபா நிதி நன்கொடையாக திரட்டப்பட்டன. இதன் போதே வாரியப்பொல முஸ்லிம் வர்த்தகர்களும் இந்த புத்தர் சிலை நிர்மாணப்பணிக்காக நிதி உதவிகளைச் செய்தார்கள். தற்போது நாட்டில் நிலவும் இனங்களுக்கிடையிலான மனக் கசப்புக்களை சில அடிப்படைவாத அமைப்புக்களே பிரச்சினைகளைத் தோற்றுவித்து வருகின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த வாரியப்பொல நகரிலும் சில சல சலப்புக்கள் ஏற்பட்டன. இது யாவரும் அறிந்த விடயம். எனினும் முஸ்லிம் அந்த சல சலப்புக்களையெல்லாம் கவனத்தில் கொள்ளாது முஸ்லிம் சிங்கள உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது மாத்திரமல்ல புத்தர் சிலை நிர்மாணப்பணிக்காக நன்கொடையாக நிதியுதவிகளையும் வழங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுகர்வோர் விவஹார சிரேஷ;ட அமைச்சர் எஸ். பீ. நாவின்ன, கலாசார விவகார அமைச்சர் டி. பீ. ஏக்கநாயக்க ஆகியவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அதிதிகளாக குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமர பியசீலி ரத்நாயக உள்ளிட்ட பிரமுகர்களுடன் பௌத்த விஹாரைகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விசேடமாக அஸ்கிரிய மஹா தேரரை குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் சந்தித்து குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்தார்.
0 comments :
Post a Comment