வைத்திய சாலைக்கு கடமைக்கு வந்து வெளியில் சென்ற அனைவரும் பணி நீக்கப்படுவர் -சுகாதார அமைச்சு



சேவைக்கு சமூகமளித்து கடமைகளைப் பொறுப்பேற்காது அனுமதியின்றி வெளியேறிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணி பகிஷ்கரிப்பைக் கைவிட்டு சேவைக்கு சமூகமளிக்குமாறு சுகாதார அமைச்சு நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும், இன்றைய தினம் சேவைக்கு சமூகமளித்து அனுமதியின்றி வெளியேறிய கனிஷ்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதுகுறித்த விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :