மாணவர்களின் மேம்பாட்டுக்கு விளை நிலங்களாக வீடுகளும் மாற்றமடைதல் அவசியம்!




எஸ். எல். மன்சூர் 
 பாடசாலைக்கு பிள்ளையை அனுப்பிவிட்டால் பெற்றோரின் கடமை முடிந்துவிட்டது என பல பெற்றோர்கள் நினைக்கின்றனர். பிள்ளையின் வளர்ச்சியில் பாடசாலையும் ஒரு தடைதாண்டலே தவிர பாடசாலை மட்டும் பிள்ளையின் வளர்ச்சியில் முழுக் கவனமும் செலுத்துவதில்லை.

ஏனெனில் பாடசாலைகளில் மாணவர்கள் எந்தவிதமான முரண்பாடுகளும், பிரச்சினைகளுமற்ற மிகவும் மகிழ்;ச்;;;;சிகரமான ஒரு ஜனநாயக பண்புள்ள சூழலில் கல்வியை பின்தொடர்கின்றனர். இ;வ்வாறான ஒரு சூழ்நிலையை பேணுவதற்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் உதவுதல் வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கின்றவற்றை அடையமுடியும். இன்று பாடசாலைகளில் மாணவர்கள் மீதான கற்றல் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வீடுகளும் அவ்வாறே இருக்கின்றபோது மாணவர்கள் உளரீதியான பாதிப்புக்குள்ளாகின்ற ஒரு நிலைமை ஏற்படலாம்.

 பெற்றோரின் பராமரிப்பிலிருந்த விடுபடுகின்ற பிள்ளையானது அவனது ஆரம்பக்கட்டமாக பாடசாலைக்கு செல்ல ஆயத்தமானதன் வெளிப்பாடாக பாடசாலை முன்கல்வி மையத்திற்கு சென்று அதன் பிற்பாடு முறைசார்ந்த கல்வி நிலையமான பாடசாலைக்குச் செல்கின்றான். தரம் ஒன்றில் சேர்கின்ற பிள்ளை வீட்டில் முழுநேரமும் தங்கி பெற்றோர், உற்றார், உறவினரின் அன்பில் ஆனந்தமாக உலாவிய அச்சிறு குழந்தை வீட்டுச்சூழலில் பழகிய பழக்கங்களுடன் பள்ளிவருகிறது. அங்கே சுமார் 4 – 5 மணித்தியாலயங்களை செலவு செய்கிறது. பெற்றோரின்; எதிர்பார்;ப்புக்கள் நிறைந்த கணவுகளுடன் வரும் குழந்தையை அன்போடு அரவணைக்கும் பாரிய பொறுப்பு ஆசிரியர், அதிபரை சார்ந்ததாகும்.

 பாடசாலைக்குச் செல்வதற்கு முன்னர் வீட்டில் பெற்றோருடன் உறவாடும் ஒரு மையநிலையமாக தொழிற்படும் வீட்டில், அப்பிள்ளையின் மொழிவிருத்தியானது ஆரம்பமாகிறது. பெற்றோரின் அனைத்து நடவடிக்கைகளையும் அவதானித்தும், கேட்டும் தன்னுடைய ஆரம்ப அறிவினை வீட்டின் சுற்றாடலில் பெறுகின்றான். பெற்றோர் தன் அன்பை வெளிப்படுத்தும் வீட்டிலிருந்து வரும் பிள்ளைக்கு ஆசிரியரும் தன் அன்பான அரவணைப்பினை காட்டுகின்றபோது பிள்ளையும் வீட்டுச் சூழலில் இருப்பதுபோன்ற உணர்வைப் பெறுகின்றனார். அதாவது பிள்ளையும் தன் வீட்டில் இருப்பதுபோன்;ற நிலையில் மாறுபடாது ஆரம்ப நிலையினை உணர்ந்து, படிப்படியாக பாடசாலையின் கற்றல் செயற்பாட்டுக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக அமைகிறது. இதன்காரணமாகத்தான் ஆரம்ப வகுப்பில் சேர்கின்ற பிள்ளைக்கு ஆரம்ப நாளில் தன்பெற்றோர் முன்னில் ஏடுதொடக்க விழா போன்ற நிகழ்வுகளை நடாத்துவதன் காரணமாக பாடசாலைக்கும் வீட்டுக்கும் இடையிலான தொடர்புகள் இறுக்கமடைந்து, பாசப்பினைப்பு ஏற்பட்டு ஆசிரியருடன் இணைந்து கற்கத்தொடங்கும் நிலை உருவாகின்றது.

 இவ்வாறான பிள்ளைக்கு பாடசாலையும், வீடும் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பாரியபொறுப்பும் காணப்படுகிறது. வீட்டில் குடும்பத்து பழக்க வழக்கங்கள்கூட பிள்ளையின் கற்றலுக்கு துணைபுரிகின்றன. நாளாந்த நிகழ்வுகளில் பெற்றோரின் உறவாடல்கள், அன்பான செற்பிரயோகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒளி, ஒலிபரப்பாகின்ற செய்திகள் மற்றும் அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளை பார்க்கவும், கேட்கவும் செய்தல், பத்திரிகைகளை வழங்கி வாசி;க்கச் செய்தல், உறவினர்கள் வீட்டு விசேட நிகழ்வுகளில் குழந்தைகளை பங்குபற்றச் செய்தல், கண்காட்சி, புராதன இடங்களை பார்வையிட சந்தர்பங்கள் வழங்குதல் மற்றும் புதிய சொற்களை பேசவைத்தல் போன்றவைகள் மூலமாகவும் சொல்வளம் விரிவடைந்து பாடசாலையின் கற்றலுக்கு துணைபுரிகின்றன.

 இதேவேளை மேலத்தேய நாடுகளில் இன்று வீட்டுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றன. நமது நாட்டிலும் பெற்றோர்கள் இதனை முன்னெடுக்கலாம். அதாவது பாடசாலைக்கல்வியோடு இயைந்ததாக வீட்டுப்பாடத்திட்டத்தை தயாரித்து மாணவர்களுக்கு உள நெருக்கீடுகள் அற்றநிலையில் இதனை கைக்கொள்ளுகின்றபோது வீட்டிலும், பள்ளியிலும் கற்றல் நிலை காணப்படுகின்ற ஓருசூழ்நிலையில் எவ்வேளையிலும், எதனையும் கற்றலுடன் தொடர்புபடுத்தியதாகவே  காணப்படுவான். உதாரணமாக விளையாட்டு நேரம் வந்தால் அப்பிள்ளை விளையாடச் செல்கிறது. அங்கே விளையாடிய விளையாட்டுக்கள், பங்குபற்றியோர், விளையாடிய விதம், இடம், அதிலுள்ள நுட்பங்கள் போன்ற இன்னோரன்ன விடயங்களை பெற்றோர் கேட்கின்றபோது பிள்ளை கூறும். அதிலுள்ள பிழைகளை திருத்தி சரியான விளக்கம் பெறுகின்ற போது மறக்காத நிலை காணப்படும். இன்றைய கல்வித்திட்டமும் செயற்பாட்டுடனான கல்வியே போதிக்கப்படுவதால் விளையாட்டின் மூலமாக பிள்ளை கற்கிறது எனலாம்.

 பிள்ளையின் செயற்பாடுகளை பெற்றோர் எவ்வேளையும் அவதானிக்கக்கூடிய நிலையை உருவாக்குவதன் ஊடாக பிள்ளையின் கற்றலுக்கு துணைபுரியலாம். அதாவது ஆசிரியரது பாடசாலைக் கற்றலின் ஊடாக அப்பிள்ளை அடைந்துகொள்ள எத்தனிக்கும் நன்மைகள், பழக்கவழக்கங்கள், அறிவு, திறன், மனப்பாங்குகள் போன்றவற்றுடன் பள்ளிவருகின்ற நிலையில், கற்பிக்கும் ஆசிரியரின் செயற்படுகின்ற திறன் அதிகரித்துக் காணப்படும். எனவேதான் குடும்பரீதியான பழக்கவழக்கங்களை உள்ளடக்கியதாக வீட்டுச் சூழல் காணப்படுகின்றபோது பிள்ளையும் மிகச் சிறப்பான முறையில் கற்பார்கள். எனவேதான் பாடசாலையின் தொடர்புகள் பெற்றோருக்கு அவசியம் தேவையான ஒன்றாக காணப்படுகிறது.

 அண்மையில் ஒரு பாடசாலையில் மாணவர்கள் சிலரை மொழிப்பாடத்தில் போட்டி ஒன்று வைப்பதற்கு ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் பலருக்கு பயிற்சி அளித்து வந்தார். ஒரு நாள் அப்பிள்ளைகளில் ஒருவர் ஆசிரியர் கூறுகின்ற விடயங்களை கவனியாது, சரியான முறையில் கூறாததாலும், மனப்பாடமிடாததாலும் அம்மாணவன்மீது ஆசிரியருக்கு கோபம்வந்து பிரம்பினால் இரண்டு அடி அடித்துவிட்டார். அடுத்தநாள் பிள்ளையின் பெற்றோர் பாடசாலைக்குவந்து தன்னுடைய பிள்ளை இப்போட்டியில் பங்குபற்றுவதற்கு முடியாது பிள்ளைக்கு ஆசிரியர் அடித்துவிட்டார். மனணமிடமுடியாது என்று கூறியதன் காரணமாக அப்போட்டியிலிருந்து பிள்ளையை விலக்க வேண்டியதாயிற்று.  அதன்பின்னர் மற்றய மாணவர்களுக்கு போட்டிக்கான பயிற்சிகளை வழங்குவதில் ஆசிரியருக்கு மிகவும் சஞ்லமாய் போய்விட்டது. இவ்வாறுதான் நமது பாடசாலைகளின் நிலை. ஆனால் பிள்ளைகளை மிகவும் கஷ;டப்பட்டு போட்டிகளில் சேர்க்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைகளும் பாடசாலைகளில் காணப்படுகின்றன. இந்த நிகழ்வின் மூலம் பாடசாலைக்கும் வீட்டுக்கும் உரியவாறான தொடர்புகள் சரியான முறையில் இல்லை என்றே கூறலாம்.

உண்மையில் ஒரு ஆசிரியர் வகுப்பறையில் சுமார்;; 40 மாணவர்களுடன் ஆறு மணித்தியாலங்களுக்கும் மேலாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் பாடசாலையின் ஆவணங்கள், ஏனைய போட்டிநிகழ்வுகளுக்கு பிள்ளைகளை தயார்செய்தல், காரியாலய வேலைகள், வகுப்பறை பதிவுகள், மாணவர்களின் செயற்பாடுகளை பார்வையிட்டு ஒப்பமிடுதல், கற்றல் உபகரணங்கள் தயார் செய்தலும் காட்சிப்படுத்துதலும், வருகின்ற கல்வியதிகாரிகளின் மேற்பார்வை போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கும் மத்தியில் தனது மாணவர்கள் ஏனைய மாணவர்களுடன் போட்டியிட்டு திறமை காட்டுவதற்காக வேண்டி இரவுபகல் பாராது பயிற்சி வழங்கி, கூடிய புள்ளிகள் எடுக்கின்றபோது பாடசாலைக்கும், மாணவனுக்கும், கற்பித்த ஆசிரியருக்கும் பாராட்டுக்கள் கிடைக்கின்ற போது பெற்றோரும் மகிழ்வுறுவர்.

இந்தநிலைமைக்கு வீடும் பாடசாலைக்கும் உள்ள தொடர்புகள் அதிகமாக காணப்படுகின்ற போதுதான் பிரகாசமாக இருக்கும். பிள்ளை எத்தனையாம் தரம் கற்கிறான் என்று பெற்றோரிடம் கேட்டால் தெரியாத பெற்றோர்களும் நமது நாட்டில் இருக்கின்றார்கள். பொதுவாக இவைகள் கிராமத்துப்புறங்களில் அதிகமாகவே காணப்படுகின்றது. இன்று உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கின்ற நிலையில் நமது கல்வியும். பெற்றோரும் ஆசிரியர்களும், பாடசாலைகளும் இவ்வாறு மந்தகதியில் நடைபெறுகின்ற நிலையில் எவ்வாறுதான் வீட்டுப்பாடத்திட்டதில் கவனம் செலுத்தமுடியும். அதேநேரத்தில் ஆசிரியர்;கள் லீவு எடுப்பார்கள். அந்தநேரத்தில் பெற்றோர்கள் வருகைதந்து மாணவர்களுக்குரிய சில செயற்பாடுகளை செய்விக்கின்ற ஒரு நிலைமையும் இன்று பல பாடசாலைகளில் காணப்படுகின்றன.


பாடசாலைகளும் பெற்றோர்களை வரவழைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுதல் வேண்டும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடசாலை மேம்பாட்டுத் திட்டத்தில் பெற்றோரின் பங்குபற்றல் மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது. அதுமட்டுமா? பாடசாலையின் எதிர்காலச் செயற்பாடுகள் எதனை நோக்கியதாக அமைய வேண்டும் என்பதை பாடசாலையின் நோக்கு, இலக்குகளை பெரியளவில் அடையாளமிட்டு பாசாலையின் சுவர்களில் தொங்குகின்றன. இந்த நோக்கையும், இலக்குகளையும் அடைய எடுக்கின்ற நடவடிக்கைகளைப்பற்றி எந்தப் பெற்றோராவது பாடசாலையின் அதிபரிடம் சென்று எந்த இடத்தில் நிற்கிறீர்கள், தேவையான விடயங்கள் என்ன? போன்றனபற்றி யாரும் பெரிதாக பேசியதே கிடையாது. வளர்ந்த பாடசாலைகளில் சிலவேளைகளில் இவைகள் நடைபெறும். வளர்ச்சியடையாத பிரதேசங்களில் இவைகள் பூச்சியமானதாவே காணப்படும். இதற்கான விழிப்பூட்டும் நிகழ்வுகளை பெற்றோருக்கு தெரியப்படுத்துவதும் பாடசாலையின் நிருவாகத்திற்குள்ள கடமையாகும்.


எனவே, இவ்வாறான நிலைகளின் மத்தியில் உலகின் போக்குக்கு ஏற்ப நமது பாடாசலைகளும், வீடுகளும், பாடத்திட்டங்களும், குறிப்பாக நம் எல்லோரினதும் உள்ளங்களின் போக்குகளில் மாற்றம் ஏற்பட அறிவுத் தேடல்களை பெறுவதற்கு வாசிப்புப்பழக்கத்தையும், தகவல்களை அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்துதல் வேண்டும். கற்பதற்கான வீட்டுச் சூழலின் உருவாக்கத்தை முன்னெடுத்துச் செல்கின்ற பணி பாடசாலைகளுக்குரியதேயாகும். பெற்றோரின்  கல்வியறிவு, பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து போன்ற நிலைகள் எப்படியிருப்பினும் மாணவர்களின் கற்றலை சிறப்பாக வீட்டுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் எவ்வித பிரச்சினைகளும் எழாது. மாணவர்களுக்கு உற்சாகமூட்டி பாடங்களை சிறப்பாக கற்பதற்கு வீடும், பாடசாலையும் துணைபுரிவதற்கும், நாளைய சிறந்த சந்ததிகைளை உருவாக்கும் பணியில் வீடும், பாடசாலையும் ஒத்துழைப்பு வழங்குகின்றபோது நாம் எதிர்பார்க்கின்ற நற்பிரஜையை  உருவாக்கலாம் அல்லவா!


எஸ். எல். மன்சூர் (கல்விமாணி),
அட்டாளைச்சேனை
(தி.த)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :