(பஹ்மி யூஸூப்)
திருகோணமலை கிண்ணியா அஷ்ஷெய்ஹ் நாஸிக் மஜீத் (நளீமி)யை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ' நிகழ் காலம் ' காலாண்டு சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு 07.04.2013 ஞாயிற்றுக்கிழமை காலை கிண்ணியா பொது நூலக கோட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கிண்ணியாவின் கவிஞர் காலாபூஷணம் கவிஞர் ஏ.எம்.எம்.அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் வெடிபொருட்கள் உதவி;க் கட்டுப்பாட்டாளர் எம்.எஸ்.எம்.இக்ரிமா, சிறப்பு அதிதியாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன்.
வரவேற்புரையை கிண்ணியா பொத நூலக நூலகர் எம்.டீ.சபறுல்லாக்கானும், சஞ்சிகை மதிப்பீடடுரையை உயர் நீதி மன்றப் பதிவாளர் எம்.எஸ்.நியாஸ் அவர்களும், கருத்துரையினை கவிஞர் சிறுகதை எழுத்தாளர் இலக்கியவாதி சட்டத்தரனி சபறுல்லாஹ்வும் ஏற்புரையினை சஞ்சிகை ஆசிரியரும் வழங்கினர்.
சஞ்சிகையின் முதல் பிரதியை பிரதம ஆசிரியரிடமிருந்த கிண்ணியா அம்ரா ஜூவலரி உரிமையாளர் ஏ.எம்.எம்.நஸீக் பெற்றுக் கொண்டதுடன் ஆதரவாளர்கள் இலக்கியவாதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment