இந்தியத் துாதுக் குழுவினரை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சந்திக்கவுள்ளது.

 (எஸ்.அஷ்ரப்கான்)

லங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்தியத் துாதுக் குழுவினரை அகில
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 10ம் திகதி நாளை இரவு 7.30 மணிக்கு சந்தித்து
உரையாட உள்ளது.

இச்சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக
கலந்துரையாடப்பட இருப்பதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விவகாரம்,
இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் பங்கு மற்றும் இனவாதிகளினால்
முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகாலப்பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக
கலந்துரையாட இருப்பதாகவும்இ குறிப்பாக இந்தியாவில் 18 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.அதாவது, உலகில் 2வது பெரிய முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட  நாடு இந்தியாவாகும்.

இந்நாடு இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகளில் அக்கறையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இந்தியாவிலுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள், மத அமைப்புக்களுடன் எதிர்காலத்தில் நெருக்கமாகச் செயற்பட இருப்பதாக தெரவித்த அவர்இ இன்றையகாலகட்டத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் முழுமையாக சர்வதே சமயப்படுத்தப்பட வேண்டிய தேவை இருப்தாகவும், உலகில் 5 இல் 1 பங்குமுஸ்லிம்கள் வாழுகின்றனர்.

சனத்தொகையில் மிகச்சிறிய விகிதமாக இருந்தாலும் கூட இலங்கை முஸ்லிம்கள் அநாதைகளல்ல என்ற யதார்த்தம் இலங்கை அரசியல் ரீதியாக சம்மந்தப்பட்ட சகலரும் ஜீரணிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :