இலங்கை .ராணுவத்தின் உளவுப் பிரிவில் அதிகளவில் முஸ்லிம்கள் உள்ளனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சோக தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் அவர்களுடன் சண்டையிட்டு முஸ்லிம் இராணுவ வீரர்களும் உயிர்த் தியாகம் செய்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முஸ்லிம்கள் எவ்வித ஒத்தாசைகளையும் வழங்கவில்லை.மாறாக, அரச படையினருக்கே அவர்க
ள் ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளுடனான நட்பை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும். முஸ்லிம்கள் நாடுகள் கூட எம்மோடு மிக நட்புக் கொண்டவை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் போன்றோர் எம்முடன் இணைவார்களாயின் அவர்களை மாலையிட்டு வரவேற்க நாம் தயாராகவுள்ளோம். இவ்வாறு சரத் பொன்சேகா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment