திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அவமதிக்கப்படும் கர்ப்பிணிப்பெண்கள்.


திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்கு வரும் கற்பினித்தாய்மார்கள் கடுமையான முறையில் வார்த்தைகளால் திட்டப்படுகின்றார்கள் என நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தில் மத்திய தலத்தில் காணப்படுகின்ற இப்பொது வைத்தியசாலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


குறிப்பாக அதிலும் பிரசவத்திற்காக வருகின்றவர்கள் அதிகமான தொகையாக காணப்படுகின்ற நிலையில் இவர்கள் பிரசவத்திற்காக வோட்டிலே அல்லது பிரசவ அறையிலோ,சத்திர சிகிச்சை அறையிலோ செல்லுகின்ற வேளையில் அங்குள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள் தகுதியற்ற வார்த்தை பிரயோகங்களை செய்வதாகவும்,கொடூரமாக நடந்து கொள்வதாகவும் பிரசவ தாய்மார்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள வைத்திய பணிப்பாளர், மற்றும் வைத்திய நிபுணர்கள் சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்ற போதிலும் கடமைக்கு அமர்த்தப்படுகின்ற குடும்பநல உத்தியோகத்தர்கள்,பெண் தாதிய உத்தியோகத்தர்கள் பொறுப்பற்ற முறையிலும் சேவைத்தன்மையற்ற முறையில் நடந்து கொள்வதினால் பல பிரசவத்தாய்மார்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றார்கள் என குற்றம் சாட்டப்படுகின்றது.

பிரசவ தாய்மார்களுக்கு சின்டோ எனும் ஊசி மருந்து ஏற்றப்படுகின்ற போது கூடிய பிரசவ வலி ஏற்படுகின்றது. அவ்வேளையில் வலி தாங்க முடியாமல் கதறியழும் தாய்மார்களுக்கு வாயில் கதற வேண்டாம் என அடிப்பதாகவும்,தலைமுடியை இழுத்து முகத்தில் அறைவதாகவும் பாதிக்கப்பட்ட தாய் கவலையுடன் தெரிவித்தார்.தான் பிரசவத்தில் ஏற்பட்ட வலியினால் குடும்பநல உத்தியோகத்தர்கள் அடித்த அடிகள் கணக்கில்லை.


இருந்தும் தற்போது எனது முகத்தில் அடித்த அடிகளின் விளைவு தான் நோவாக காணப்படுகின்றது. ஏழைக்குடும்பத்தில் பிறந்ததைக்கண்டு வாய் மூடி இருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆனாலும் எனக்கு நடந்த சம்பவம் மற்றவருக்கு நடக்க கூடாது எனவும் பாதிக்கப்பட்ட நோயாளி விம்மி அழுத வண்ணம் கதையை கூறினார்.

இது சம்மந்தமாக உயரதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதுடன்,உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட இன்னுமொறு தாய் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :