இன்று சிங்கள தேசியவாதம் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குகிறது- அமைச்சர் ஹக்கீம்


(எம்.பைஷல் இஸ்மாயில்)

லக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை இலங்கையில் நடத்துவதை காரணம் காட்டி முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டு எல்லாவற்றையும் மிஞ்சியதான மேலாதிக்கத் தாக்கம் நடத்தப்படலாம்.

இன்று சிங்கள தேசியவாதம் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குகிறது. என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் நீதியமைச்சர் றஊப் ஹக்கீம் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக தொடர்ந்து உரையாற்றுகையில், சமகால சங்கடங்களின் மத்தியிலேயே இம்மாநாட்டை நடத்தவுள்ளோம்.

 இன்று முஸ்லிம்களின் அடையாளத்தை வலியுறுத்த வேண்டிய  மிக முக்கியமான கால கட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.
அரசியல் வேறுபாடுகளை மறந்து நாம் ஒன்றுபட வேண்டுமென்ற கோஷங்கள் இன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பேசப்பட்டு வலுவடைந்து கொண்டிருக்கிறது.

ஏனெனில் இன்று திட்டத் தீட்டி இலக்கு வைத்து முஸ்லிகளின் அடையாளங்களில் கை வைக்கின்றனர். இம்மாநாட்டை நடத்துவதற்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் அமைச்சர் அதாவுல்லாவும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடத்தியபோது அது விடுதலைப் புலிகளின் பார்வையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் சமகாலத்திலேயே 'மானுடத்தின் தமிழ் ஊடல்' எனும் தொனிப் பொருளில் மாநாடொன்றையும் நடத்தினார்கள். எனினும் அப்போது நாம் அதனை அமைதியாக நோக்கினோம்.

ஆகவே இன்றைய சூழலில் சிங்கள, தமிழ் சமூகம் இம்மாநாட்டை சந்தேகக் கண்கொண்டு நோக்கலாம். அதிலும் சிங்கள தேசியவாதம் மிஞ்சிய மேலாதிக்க சக்திகளாகவும் செயற்படலாம் எனவும் அமைச்சர் றஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :