கடந்த 31.03.2013 அன்று புதிய காத்தான்குடி பாரீத் நகர் மஸ்ஜித் மனாருல் ஹுதா பள்ளிவாயல் மஹல்லா பகுதியில் வசிக்கும் முஹம்மது கபீர் முஹம்மது வலீத் என்ற ஒரு வயது ஆண் குழந்தை பிறக்கும் பொது மூளையில் கட்டியுடன் பிறந்துள்ளதால், அதற்குரிய சத்திரசிகிச்சைக்காக உதவி கோரும் வேண்டுகோள் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
பூரண விபரங்களுடன் கூடிய முந்திய செய்தியை இந்த இணைப்பில் காணலாம்.இக்குழந்தைக்கு ஒருமுறை சத்திரசிகிச்சை செய்யப்பட்டு, இன்னொரு சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை அவசரமாக இந்த சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டும் என குழந்தையின் தந்தை எம்மிடம் தெரிவித்தார்.
குறித்த சத்திரசிகிச்சைக்கு தேவைப்படும் மூன்று இலட்சம் ரூபாவில், இரண்டு இலட்சம் ரூபா தனவந்தர்களிடமும் இணையத்தள வாசகர்களிடமிருந்தும் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்.
மேலும் சேகரிக்கப்பட்ட பணம் நேற்று (12.03.2013) வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் செலுத்தப்பட்டதாகவும், மிகுதி ஒரு இலட்சம் ரூபா எதிர்வரும் புதன்கிழமை செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், இந்த வேண்டுகோளை மீண்டும் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
முடியுமான வாசகர்கள் இந்த சிறு குழந்தையின் நிலையையும் அவர்களது குடும்ப நிலையையும்கருத்திற்கொண்டு சத்திரசிகிச்சைக்காக பண உதவிகளை செய்யுமாறு அவர் கோரினார்.
வங்கிக்கணக்கு விபரம் வருமாறு:
A.L. Vahitha (தாய்)
Account number : 4116050
Bank of Ceylon
Kattankudi.
Mobile : 0770285191
இது இம்போட்மிரரின் சமூக சேவையே தவிர வேறில்லை.
இது இம்போட்மிரரின் சமூக சேவையே தவிர வேறில்லை.
0 comments :
Post a Comment