றிபாஸ் -
ஹலால் விடயம் நீண்டகாலமாக நாட்டில் கடைப்பிக்கப்படுகின்ற யாரையும் நிர்ப்பந்திக்காத நிலையிலிருந்த போது அது ஒரு சிறு குழுவினால் பிரச்சினையாக்கப்பட்டிருப்பது வேதனையானது.
இப் பிரச்சினையின் பின்னணி பற்றி நாட்டை உண்மையாக நேசிக்கின்ற ஒவ்வொரு பிரஜையும் இப் பிரச்சினை குறித்து நிதானமாகவும் தெளிவாகவும் ஆராய வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை அமர்வில் அவர் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,
இந்த நாட்டில் பிரச்சினை இல்லாமல் இருப்பது சிலருக்கு பிரச்சினையாக இருக்கின்றது. பிரச்சினை இருந்தால் தான் வாழலாம் என்று நினைக்கின்ற குழுக்கள் இருக்கின்றார்கள். அந்நிய சக்திகள் இருக்கின்றது.
நாடு அமைதியாக இருப்பதை விரும்பாத சர்வதேச சக்திகள் இருக்கின்றன. அந்த சக்தியினுடைய ஏற்பாட்டில் சிறுகுழுதான் இப் பிரச்சினையை விஸ்வரூபமாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றது. இதனை வெறுமனே இனப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை பௌத்த மக்கள் மிக பண்புடையவர்கள் என்ற பார்வை எங்களுக்குமிருக்கின்றது. இஸ்லாமிய மார்க்கத்தில் கூறிய அதிகமான விடயங்களை கடைப்பிடிக்கின்ற சமூகமாக பௌத்த சமூகத்தை பார்க்கின்றோம்.
ஆகவே மக்கள் யாரும் இலகுவில் குழப்பமடையமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. பாகிஸ்தானில் இருந்து அல்லது வேறு எங்கிருந்தோ பயங்கரவாதிகளை நாட்டிற்கு அழைத்து வருகின்றார்கள் என்ற செய்தியை யாரும் நம்பப்போவதில்லை. சென்ற காலங்களில் நாட்டின் உளவுத்துறை சார்ந்தவர்களின் திறமை பற்றிய தெளிவு அனைவருக்கும் இருக்கின்றது.
மிக இலகுவாக அவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களை கொண்டு வந்து மக்களைச் சீர்குலைக்க முடியாது. யாரும் இலகுவாக ஏமாறப்போவதில்லை. ஆகவே இப் பிரச்சினை குறித்து மிகத்தெளிவாக நிதானமாக நாங்கள் யோசிக்க வேண்டும். 'ஹலால்' என்பது இறைவனால் அனுமதிக்கப்பட்டது. இஸ்லாமிய சமூகத்தவர்கள் சரியான விளக்கத்தை ஏனைய இதர சமூகத்தவர்களுக்கு விளக்கத்தை கொடுக்கவில்லை.
அதனால் தான் இப்பிரச்சினை உருவாகியிருக்கின்றது என்றும் நாங்கள் பார்க்கலாம். எம்மைப்படைத்த இறைவனால் எமது மார்க்கத்திற்கு அருளப்பட்ட வசனங்கள் தான் 'புனித திருக்குர்ஆன்' அதனை ஏற்றுக்கொண்டு நம்பியவர்கள் தான் இஸ்லாமியர்கள். இறைவனால் அருளப்பட்ட குர்ஆனில் மனித குலத்திற்கு அனுமதிக்கப்பட்டவைகளும், மறுக்கப்பட்டவைகளும் இருக்கின்றன. அது முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல.
எங்களுக்கு பாரிய கடமை ஒன்று இருக்கின்றது. இங்கே பிரச்சாரம் மேற்கொள்வதைப் போன்று 'ஹலால்' 'ஹராம்' விடயங்களை நாங்கள் யார் மீதும் திணிக்கவில்லை. ஆனால் அவ்வாறு திணிக்காமல் இருப்பதே நாம் செய்கின்ற துரோகம் என நம்புகிறேன்.
உண்மையில் 'ஹலால்', 'ஹராம்' பற்றிய சரியான விளக்கத்தை அது சம்பந்தமாக எங்களுக்கு தரப்பட்டிருக்கின்ற இறைவனுடைய கட்டளையை சரியாக நடைமுறைப்படுத்துபவர்களாக இருந்தால், இதனை இதர சகோதரர்களுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
மனித, முழு உலகத்திற்கும் சொல்லப்பட்டது தான் இந்த அனுமதிக்கப்பட்ட விடயம். உணவு, பழக்க வழக்கங்கள் மாத்திரமல்ல அனைத்திலும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட விடயங்கள் இருக்கின்றது. தடுக்கப்பட்ட விடயங்கள் இருக்கின்றது. யாரைத் திருமணம் செய்ய வேண்டும். யாரைத் திருமணம் செய்யக் கூடாது எனக் கூறப்பட்டிருக்கின்றது.
ஒருவருடைய மனதை புன்படுத்த முடியுமா? இல்லையா எனக் கூறப்பட்டிருக்கின்றது. அருகில் உள்ள ஏழை ஒருவன் உணவு அருந்தி விட்டானா? இல்லையா? என்பதை பார்க்காமல் உணவருந்தி விடாதீர்கள் என்று மிகத் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது. இவர்களுக்கும் அன்புகாட்டுகின்றவர்களாக இருந்தால் அவர்களுக்கும் இதனை நாங்கள் கூறவேண்டும்.
இந்த விடயம் யாருக்கும் திணிக்கின்ற விடயம் அல்ல. ஹலால் சான்றிதழ் இல்லாமல் தங்களுடைய பொருட்களை உற்பத்தி செய்யட்டும். அவர்களுக்கு விற்பனையை அதிகரிக்கச் செய்வதற்குத்தான் ஹலால் சான்றிதழ் தேவைப்படுகின்றது.
இலங்கையில் மாத்திரமல்ல, தன்னுடைய பொருட்களை சர்வதேசத்தில் இருக்கின்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் தாரளமாக விற்பனை செய்யலாம் என்பதற்கு அந்தச் சான்றிதழ் தேவைப்படுகின்றது. தேவையில்லை என்றால் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் விடலாம். நாங்கள் அனுமதித்த பொருட்களை உண்பதை எதிர்க்கின்றவர்கள், தேவையென்றால் அனுமதிக்காத பொருட்களை அவர்கள் உண்ணலாம்.
எமது மார்க்கத்தில் பன்றி இறைச்சி உண்ணக்கூடாது 'ஹராம்' என்று கூறப்படுகின்றது. இதற்கு எதிரானவர்கள் யாரும் இருந்தால் பன்றி இறைச்சியை உண்ணலாம். நாய் இறைச்சியை உண்ணாதீர்கள் என்று தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது. இல்லை 'ஹலால்', 'ஹராம்' விடயங்களை நாங்கள் எதிர்க்காதவர்கள் என்று யாரும் கூறினால், அவர்கள் நாய் இறைச்சியை உண்ணலாம்.
இது அவர்களின் சுதந்திரம். அதை யாரும் பறிக்கவில்லை. ஆகவே இதை பாரியதொரு பிரச்சினையாக யாரும் கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முஸ்லிம் நாடு என்றும் தமிழ் நாடு என்றும் இதனைக் கூறவில்லை. கூறாதவரை யாரும் பௌத்த நாடு என்று கூறுவது நல்லதல்ல. அவ்வாறு கூறுவதால் எங்களை அந்நியப்படுத்தி, தூரப்படுத்தி பார்ப்பதாகவே இருக்கின்றது. இனவாதக் கட்சிகள் குறித்து மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள அவர்கள் கூறினார். இனவாதக் கட்சிகள் உருவானது காலத்தின் தேவை என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்.
வரலாறு தெரியாமல் பேசுகின்றீர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழர் விடுதலைக் கூட்டணி என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்றும் இன ரீதியாக கட்சிகள் உருவாகுவதற்கு காரணம் 'இனவாதிகளாக ஆட்சியாளர்கள் இருந்தமையே அன்றி வேறெதுவும் இல்லை.
அவ்வாறான நிலைமை வரக் கூடாது என்பது தான் எமது ஆசை.
இனவாதக் கட்சிகள் இல்லாத சூழல் தேவையே இல்லை என்பதை அனைவரும் உணரக் கூடிய வகையில் ஆட்சி செய்து காட்டுங்கள். இரண்டாம் மூன்றாம் தரத்தில் எந்தவொரு இனத்தையும் பார்க்காமல் ஆளுகின்றவர்களாக மாறிக்காட்டுங்கள் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் நீங்கள் ஆட்சி செய்து காட்டுங்கள். அதனை ஜனாதிபதி அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார். ஆசைப்படுகின்றார், ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மக்கள் என்று கூறுகின்றனர்.
ஆனால் அதற்கு பிழையான அர்த்தம் கற்பிக்க சிலர் முனைகின்றார்கள். அவ்வாறு என்றால் ஏனைய சமூகத்தவர்கள் வாழக்கூடாது என்றல்ல. எந்தவிதமான இனவாத ரீதியான கருத்துக்களும் வந்து விடக்கூடாது என ஜனாதிபதி விரும்புகின்றார்;. இந்த நாட்டை சமாதானமான நாடாக தொடர்ந்து நடத்திச் செல்ல வேண்டும் என்ற அவருடைய ஆசையை, நிராசையாக அதற்கு துரோகம் செய்கின்றவர்களாக இருக்கின்ற சிலர்தான் இப்பிரச்சினையை உருவாக்குகின்றார்கள்.
நாங்கள் யாருடைய சதியிலும் சிக்கி விடக் கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருக்கின்றோம். இதில் ஜனாதிபதி அவர்களும் அல்ல, ஆட்சியார்களும் அல்ல, எந்தவொரு அரசியல் தலைவர்களும் அல்ல.
இதுவொரு இனவாத அமைப்பில் கொண்டு வந்து நாட்டில் பிரச்சினையை தோற்றுவிக்க வேண்டும். அதனால்தான் தாங்கள் வாழலாம் என்ற நோக்கத்தோடு உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் இருக்கின்றது. அந்த சக்திகள் வேறு இனவாத காரணங்களைக் கூறி வருகின்றது.
இவ்வாறான விடயங்களில் அரசியல் தலைவர்கள் பொறுப்பு வாய்ந்தவர்களாக செயற்பட வேண்டும். மீண்டும் நாட்டை மோசமான ஒரு நிலைமைக்கு இட்டுச் செல்கின்றவர்களாக நாங்கள் இருந்துவிடக் கூடாது. கொண்டு வந்திருக்கின்ற வரலாறுகள் இருக்கின்றது. ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மனித வளங்களை இழந்திருக்கின்றோம். நீண்டகாலமாக அபிவிருத்தி விடயங்களில் மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இவ்வாறான பாடங்கள் இருக்கின்ற போது, மீண்டும் எங்கள் குழந்தைகளுக்கு மோசமான நாட்டையும், சூழலையும் பெற்றுக்கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் நாங்கள் மிகத் தெளிவாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது.

0 comments :
Post a Comment