தமிழர்களை காக்கும் போர் வாள் என்ற அமைப்பு-முஸ்லிம் விரோத பிரசுரம்.



(எம்.பைஷல் இஸ்மாயில்)

திராவிடன் சேனையின் தமிழர்களை காக்கும் போர் வாள் என்ற அமைப்பு உரிமை கோரி இன்று 08 ஆம் திகதி இறுதித் திகதியாகும். தமிழர் தாயக பூமியை விட்டு முஸ்லிம் வர்த்தகர்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் ஒன்று வாழைச்சேனை பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை போடப்பட்டுள்ளது.

இறுதி எச்சரிக்கை என்னும் தலைப்பில் வெளியான துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!

தமிழர் தாயக பூமியை ஆக்கிரமிக்கும் நோக்கோடு எமது தாயக மண்ணில் வர்த்தகம் செய்யும் இஸ்லாமிய வர்த்தகர்களை வெளியேறுமாறு எச்சரித்தும் அதனை அலட்சியம் செய்த இஸ்லாமிய வர்த்தகர்களே!

எதிர்வரும் சித்திரை 08ம் திகதிக்கு முன்னதாக மண்ணை விட்டு வெளியேறுமாறு இறுதியாக எச்சரிக்கின்றோம்.

வன்முறை எமது வழியல்ல, அதுதான் வழி என நீங்கள் கருதினால் அதைவிட வேறு வழி எமக்கில்லை.

திராவிடன்சேனை தமிழ்களை காக்கும் வாள் என்று போடப்பட்டு வாளின் படமும் அத்துண்டுப் பிரசுரத்தில் போடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :