(எம்.பைஷல் இஸ்மாயில்)
அண்மைக் காலமாக இலங்கையில் ஊடகச் சுதந்திரம் தொடர்ந்தும் கேள்விக் குறியாகவே இருந்து வருகின்றது.
கிளிநொச்சியிலுள்ள 'உதயன்' அலுவலகம் மீதும் ஊழியர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலை கன்டித்து தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் (நுஜா) அமைப்பின் விஷேட கூட்டம் அட்டாளைச்சேனையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு பேசும்போது அமைப்பின் தலைவரும் ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு பக்கச் சார்பின்றி செயற்படுவதுதான் ஊடகம். அதற்கும் இவ்வாறனதொரு நிலைமை என்றால் நாட்டில் எப்படி ஊடகச் சுதந்திரம் உண்டு என்று எவ்வாறு சொல்ல முடியும். 'உதயன்' மீதான தாக்குதல் பற்றி கேள்வியுற்றதும் உடனடியாக தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் கூட்டத்தினை மிக அவசரமாக கூட்டும்படி நான் அமைப்பின் செயலாளர் முஹம்மது பைஷல் இஸ்மாயிலுக்கு தொலைபேசி ஊடாக அறிவித்தல் விடுத்திருந்தேன்.
இவ்வாறு கூட்டப்பட்ட இந்த அவசர விஷேட கூட்டம்தான் இன்றையக் கூட்டம். நான் குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற எனக்கு பெரிதும் கவலையைத் தந்தது. என்று தெரிவித்த நுஜா அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் அது குறித்து விடுத்துள்ள கண்டனச் செய்தியில் மேலும் தெரிவித்தவையாவன,
'சுடர்ஒளி' பத்திரிகையின் சகோதரப் பத்திரிகையான 'உதயன்' பத்திரிகையானது வடக்கில் மட்டுமன்றி தற்பொழுது தலைநகரான கொழும்பிலும் கூட இப்பத்திரிகை விற்பனையாகி வருகின்றன. இப்பத்திரிகைக்கென ஒரு தனியான வாசகர் வட்டம் ஒன்றும் உள்ளது. இப்பத்திரிகைக்கென்று ஒரு தனிரகம் இப்பத்திரிகையை ஒருவர் ஒருதடவை வாங்கிப் படித்தார் என்றால் மறுகனம் அப்பத்திரிகையை வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆவல் குறிப்பிட்ட நபருக்குள் உருவாக்கிவிடும்.
செய்தி ஊடகங்களை இலக்கு வைத்து தாக்கப்பட்டு வருவது ஆரோக்கியமான ஒரு செயலாகத் தெரியவில்லை. அது வாசகர்களுக்கு உரிய தகவல்களை நாளாந்தம் வழங்கி வருவதும் அந்த உரிமையை மறுப்பதும், மலினப்படுத்தி வருவதும் மிக மோசமான ஒரு செயலாகவே நானும் எமது நுஜா ஊடக அமைப்பினரும் கருதுகின்றோம்.
நாட்டில் ஊடகங்களுக்கு எதிரான இவ்வாறான ஒரு அடாவடித்தனங்கள் மேற்கொள்ளப்படும் போது அதில் சம்பந்தப்பட்டவர்களை பொலிசார் கைது செய்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எவ்வித பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் என நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு செயற்பட்டால் மாத்திரம் தான் நம் நாட்டில் ஊடகத் துறைக்கு ஒரு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். இவ்வாறு செயற்பட நினைக்கின்றவர்கள் மிகத் தவறான முறையில் ஈடுபட தயக்கமடைவார்கள். என்று தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் (நுஜா) அமைப்பின் தலைவரும், ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் விடுத்துள்ள கண்டனச் செய்தியில் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment