(எம்.பைஷல் இஸ்மாயில்)
முப்பது வருட யுத்தத்தினால் பெற்றோரை இழந்த மற்றும் வறுமைப்பட்ட மாணவர்களின் மெய்யறிவையும் சிறந்த பண்மையும் மேம்படுத்தும் நோக்கில் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிசு திரிய தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள மூவின மாணவ, மாணவிகளும் நன்மையடைந்து வருகின்றனர்.
ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினால் செயற்படுத்தப்படும் சிசு திரிய தேசிய வேலைத்திட்டம் பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு அண்மையில் சாய்ந்தமருது சீ பிறீஸ் ரெஸ்ட்டோரன்டில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி விவகாரப் பணிப்பாளர் நந்தன விஜயசிங்க தலைமை வாங்கி நடாத்தி வைத்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் ஜனாதிபதி செயலக சமூக அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment