ஏறாவூர் மட் மாக்கான் மாக்கார் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இறுதி நிகழ்வுகள் நேற்று (19.04.2013) பாடசாலை அதிபர் கால்தீன் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் பஷீர் சேகுதாவூத் அவர்கள் கலந்து கொண்டதோடு; கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் M.S.சுபைர், ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் செய்யித் அலிஸாஹிர் மௌலானா, ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ V.S.வினோத் அவர்களும், விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பொறுப்பதிகாரி A.M.அஹமட் லெவ்வை, ஏறாவூர் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் S.L.M.ஹனீபா அவர்களும்; ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் S.A.நஸீரா, S.M.M.அமீர், கோட்டக்கல்விப் பணிப்பாளர் I.L.Z.ஆப்தீன் மத்தி பிரதிக் கல்வி வலயக் கணக்காளர் M.S.பஷீர், ஏறாவூர் நகர சபை செயலாளர் H.M.Mஹமீம் போன்றோரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment