(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
தனியான நில அளவை உபகாரியாலையம் அமைக்கப்பட வேண்டும்.1990 இடப்பெயர்வின் பின்னர் இப்பிரதேச மக்கள் மீழ்குடியேறி வருகின்றனர்.மக்களின் இடப்பெயர்வால் இவர்களின் குடியிருப்புக் காணிகளிலும்,விவசாயக் காணிகளிலும், காடுகள் மண்டிக்காணப்பட்டன.இவை பின்னர் பாரிய இயந்திரங்களின் உதவியுடன் துப்பரவு செய்யப்பட்டன.
பெரும்பாலான நெற்காணிகள் வரம்புகள் அழிக்கப்பட்டமை,குடியிருப்பு நிலங்களின் எல்லைகள் சரியாக இனங்காண முடியாமை போன்ற பிரச்சினைகளை மீள்குடியேறிய மக்களும், மீள்குடியேறவுள்ள மக்களும் எதிர் கொள்கின்றனர்.
1990க்கு முன்னர் நில அளவையாளர் குழுவொன்று கூழாங்குளம்,முசலி போன்ற கிராமங்களில் தங்கியிருந்து சேவை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று நில அளவையாளர்கள் மன்னார் அலுவலகத்தில் இருந்து வருகை தந்து சேவை புரிவதால் தூரம்,நேரம் என்பன பாதிப்பை ஏற்படுத்துகிறன.ஆகவே, இவற்றை நிவர்த்தி செய்ய முசலிக்கு தனியான நிலவளவை உபகாரியலயம் நிறுவப்படல் வேண்டும்.
0 comments :
Post a Comment