இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நேற்று இரவு ஒரு பெண் தனது 21 வயது மகளுடன் கடைத்தெருவுக்கு சென்றிருந்தார்.
அப்போது அந்தப் பெண்ணின் மகளிடம் போதையில் இருந்த ஒரு ஆசாமி தகாத முறையில் நடந்துகொண்டான். இதனை அந்தப் பெண் தடுத்தபோது தகராறு ஏற்பட்டது.
அந்த போதை ஆசாமிக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் சூழ்ந்துகொண்டனர். ஒருகட்டத்தில், தகராறு முற்றிய நிலையில் மகளைக் காப்பாற்ற போராடிய அந்தப் பெண்ணை பிடித்து கீழே தள்ளியுள்ளனர்.
இதனால் சாலையில் விழுந்த அந்த பெண் மீது லொரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார்.
இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்த குற்றத்தில் தொடர்புடைய நபர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளின் மகன்கள் என்று வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர்.
ஆனால், அவர்கள் மிகுந்த செல்வாக்குமிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பற்றிய தகவல்களை பொலிசார் வெளியிடவில்லை.

0 comments :
Post a Comment