மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பாகிஸ்தான் பெண்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்தி சிறிவர்தன தெரிவித்தார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ்உள்ள தடுப்பு முகாமிலிருந்தே இவர்கள் மூவரும் தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் இணையத்துக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பிரிவு.
குறித்த சம்பவம் கடந்த திங்களன்று இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. அத்துடன் இதனையொத்த மற்றொரு சம்பவம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் பதிவானதாகவும் அதன்போது ஒரு பெண்ணும் இரு பாகிஸ்தானிய ஆண்களும் தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்நிலையம் மேலும் தெரிவித்தது.
எவ்வாறாயினும் தப்பிச் சென்றோர் நாட்டிலிருந்து வெளியேறுவது சாத்தியமற்றது எனவும் அவர்கள் நாட்டினுள்ளேயே எங்கோ மறைந்திருப்பதாகவும் விரைவில் அவர்களை கைது செய்ய முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியது.
இதனிடையே குறித்த சம்பவம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேராவும் விடிவெள்ளியிடம் உறுதிப்படுத்தினார்.
வீஸா விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இவர்கள் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதாக குறித்த திணைக்களத்தின் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டினார்.
பிரதேசத்தில் வீஸா காலாவதியான நிலையில் தங்கியிருந்தபோது குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் விசேட சுற்றிவளைப்பின் போது இவர்களை கைது செய்ய முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் குறித்த பாகிஸ்தான் பிரஜைகள் நாட்டிலிருந்து தப்பிச் செல்வது சாத்தியமற்றது எனவும் இது தொடர்பில் பாக். தூதரகத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.VV
0 comments :
Post a Comment