சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. அதன்படி பொது இடங்களில் பெண்கள் வாகனங்களை செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது பெண்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்கள் ஓட்ட சவுதி அரேபிய பொலிஸார் அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால் இதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பூங்காக்கள் மற்றும் பொழுது போக்கு மையங்களில் மட்டுமே மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களை பெண்கள் ஓட்ட வேண்டும். அப்போது, தனது உறவுக்கார ஆண்களை துணைக்கு வைத்து கொள்ள வேண்டும்.
வாகனம் ஓட்டும் போது, இஸ்லாமிய சட்டப்படி தலைமுதல் பாதம் வரை முழுவதும் மூடிய நிலையில் உடை அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-
´பெண்கள் பொது இடங்களில் வாகனம் ஓட்ட அனுமதி இல்லை. அதே நேரத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகளின் போது வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவர். மேலும், இளைஞர்கள் கூடியிருக்கும் இடங்களில் வாகனம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் இதனால் பல பிரச்சினைகள், துன்புறுத்தல்கள் ஏற்படும்´ என்றனர்.AD
0 comments :
Post a Comment